விமர்சனத்திற்கல்ல, விடிவுக்கானது மணமுறிவு!- திருப்பத்தூர் ம.கவிதா

இரண்டு நல்ல மனிதர்களிடம் நடக்கும் மோசமான திருமணம் என்றொரு புதிய கருத்தைச் சொல்கிறீர்கள், இதைக் கொஞ்சம் விளக்கிச்சொல்ல முடியுமா? என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் அவர்களிடம் நேர்காணல் எடுக்கிற நெறியாளர் கேட்கும் போது, “ஆமாம். இரண்டு பேரும் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர்கள். அவர்களைச் சேர்த்து வைப்பது சில நேரங்களில் மோசமான திருமணமாக இருக்கும். ஏனெனில், ஒருவருடைய உண்மையான சுபாவம் யாருக்குத் தெரியும் என்றால் அவருடைய நெருக்கமான துணை என்று சொல்லப்படுபவருக்குத்தான் தெரியும். ‘‘இவ்ளோ நல்லா […]

மேலும்....

வரலாற்றில் மிளிரு வைர வரிகள்!- திருப்பத்தூர் ம.கவிதா

ஆற அமர்ந்து சிந்தித்துப் பார்த்தால் மேலோட்டமாகத் தெரியும் – பல செய்திகளுக்கு உள்ளே இருக்கும் மிகக் கடினங்கள். ஒருவர் போட்ட பாதையில் பின்வருபவர் பயணம் செய்வது எளிதானதுதானே என்று தெரிந்தாலும் முதலில் பயணம் தொடங்கியவருக்கு இருக்கும் சுதந்திரம் அடிச்சுவட்டில் பயணம் செய்பவருக்கு இருக்க வாய்ப்பில்லை. முதலில் பயணம் செய்பவருக்கான அனுபவங்களும் காலச்சூழலும் வேறாக இருக்கும். மாற்றமடைந்திருக்கும் காலச் சூழலிலும் வழுக்காமல் முன்னவரின் அடிச்சுவட்டில் முன்னேறுவது என்பது அத்துணை எளிதல்ல. அய்யாவின் அடிச்சுவட்டில் தன் வாழ்நாள் முழுவதும் பயணம் […]

மேலும்....

மதுரை எழுத்துப் பயிற்சிப் பட்டறை !-திருப்பத்தூர் ம.கவிதா

எதை எழுதுவது? எப்படி எழுதுவது? அதற்கான முன் தயாரிப்புகள் எவை? எழுத்தின் நோக்கம் என்ன? தாக்கம் என்ன? தரவுகள் என்ன? புதுமையைக் கொண்டு வருவது எப்படி? என்பனவற்றை வளரிளம் எழுத்தாளர்களுக்குக் கற்பிக்க, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் வாருங்கள் படைப்போம் குழுவும் இணைந்து பல்வேறு ஊர்களில் பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அந்த வகையில் 10.8.2024 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து ஒருநாள் நிகழ்வாக நடத்தப்பட்டது. ‘‘நீங்கள் பணத்துக்காக எழுதுகிறீர்களா? சக மனிதன் துன்பப்படுகிறானே […]

மேலும்....

பிஞ்சு நெஞ்சில் நஞ்சா?- திருப்பத்தூர் ம.கவிதா

செயற்கை நுண்ணறிவுக் காலமிதில் ஜீ(சீ)பூம்பா காட்டும் ஒருவன் சொத்தைக் கருத்துகளைச் சொல்லி வித்தை காட்டும் (மகா)விஷ்ணு! மந்திரங்கள் உச்சரிக்க மழையே நெருப்பாய்ப் பொழியுமாம்! உளறுகிறான் இவ்வாறாய் ஊருக்குள் இக்கிறுக்கன்! ஆகாய விமானத்தில் ஆஸ்திரேலியா போனானா? அஞ்சனை மைந்தனைப் போல் ஆகாயத்தில் பறந்தானா? பாவமாம் புண்ணியமாம் பிறவிப்பலன் கல்வியே ஞானமாம் பெரியார் பிறந்த மண்ணில் பிதற்றுகிறான் என்ன துணிச்சல்? வீறுகொள் மாணவப் பருவத்தைச் சேறுபூசிச் சிதைக்கப் பார்க்கிறான்! ஆன்மிகப் பேச்சென்று அளந்து கொட்டுவோர் வரிசையில் இப்போது இவன் புதுவரவு! […]

மேலும்....

மென்மனக் கீறல்கள்! – திருப்பத்தூர் ம.கவிதா

“மாமன் சொன்னாங்க, அத்தை சொன்னாங்க, உறவுக்காரங்க சொன்னாங்கன்னு அவசரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி பிள்ளை வாழ்க்கையை இப்படி நாமே சீரழித்து விட்டோமே” என்று நினைத்து நினைத்துத் துக்கம் தொண்டையடைத்துக் கண்கள் கசியத் தொடங்கியது சந்திரனுக்கு! “கல்லூரியில் சேர்ந்து, ஓராண்டுகூட முடியல; அதற்குள் படிப்பைப் பாதியில் நிறுத்தி எனக்குக் கல்யாணம் பண்ணாதீங்கன்னு எவ்வளவு கெஞ்சினேன் உங்க ரெண்டு பேரிடம்? படிக்கும் இடத்தில காதல் கீதல்னு சொல்லி ஜாதி விட்டு ஜாதி யாரையோ கூட்டிட்டு வந்து நின்னா என்ன பண்ணுவன்னு […]

மேலும்....