பானகல் அரசர்

பன்னரும் புகழ்மிகு பானகல் அரசர் முன்னர் திராவிடர் கழகம் சேர்ந்து பின்னர் நீதிக் கட்சியில் இணைந்தார்! சென்னை மாநில இரண்டாம் முதல்வராய் ஆட்சியும் புரிந்தார்! நீதிக் கட்சிஉள் ளாட்சித் துறையில் அமைச்சரும் இவரே! பறையர் தலித்தென அழைத்தல் வேண்டா! நிறைவாய் ஆதி திராவிடர் என்னும் பெயரினைச் சட்டம் ஆக்கினார்! மகளிர் நயத்தகு வாக்கு உரிமை வழங்கினார்! இன்புற இந்திய மருத்துவக் கல்லூரி சென்னை நகரில் தொடங்கினார்; மருத்துவக் கல்வித் தகுதியில் சமற்கிரு தத்தை வல்லவர் நீக்கியே சட்டம் […]

மேலும்....

பானகல் அரசர் பிறப்பு: 09.07.1866

வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முதல் ஆணை பிறப்பித்தவர்; கோயில்கள் பார்ப்பனர்களின் சொந்தப் பராமரிப்பில் கொள்ளையடிக்கப்பட்டு வந்ததைத் தடுக்க அறநிலையத் துறையை உருவாக்கியவர்; அரசுப் பதிவேடுகளில் பஞ்சமர், பறையர் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தவர் பானகல் அரசர் அவர்கள்.

மேலும்....

பானகல் அரசர்

பானகல் அரசர் பெரும் பணக்காரர் குடும்பத்தில் 9.7.1866இல் காளாஸ்திரியில் பிறந்தார். இவருடைய பெயர் பி. இராமராய நிங்கார் என்பதாகும். தெலுங்கு, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆக மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். 1912இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1915 வரை பிரதிநிதியாக இருந்தார். 1914இல் நடேசனாரின் திராவிடர் சங்கத்தில் இணைந்தார். நீதிக்கட்சி தொடக்கக் காலம் முதல் அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். நீதிகட்சியின் முதல் மாகாண மாநாடு கோயம்புத்தூரில் […]

மேலும்....