நாராயண குரு (கி.பி.1856-1928)
“சமூகச் சிக்கல்களின் தோற்றுவாயாக ஜாதிய முறை இருப்பதைக் கண்டுணர்ந்த நாராயண குரு, அதை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்; உறுதி பூண்டார். அதற்கு இரண்டு செயல் திட்டங்களை வகுத்தார். 1. ஜாதிக் கொடுமைகளை _ உணர்வுகளை மக்கள் மத்தியிலிருந்து களைதல். 2. அவர்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை அகற்றுதல். நாயர்கள் தங்களைத் தீண்டுவதில்லை; இழிவாக, தீண்டத்தகாதவர்களாக நடத்துகிறார்கள் என்று ஈழவர்கள் இவரிடம் சொன்னபோது, “முதலில் நீங்கள் உங்களுக்குக் கீழாக நினைக்கும் புலையர்களைச் சமமாக நடத்துங்கள்; உங்களோடு அவர்களைச் சேர்த்துக்-கொள்ளுங்கள்’’ என்றார். […]
மேலும்....