கீத கோவிந்தம்
தில்லை மறைமுதல்வன் அப்போது முன்னிரவு முடிந்து கொண்டிருக்கும் வேளை. இருளினூடே நின்று கொண்டிருந்த ஜகந்நாதரின் ஆலயத்தினுள்ளே பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆலயத்தின் உயர்ந்த சுவர்களிலும், பருமனான தூண்களிலும் சிற்பிகளின் கைவண்ணம் தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்தக் சிற்பங்கள் புகையும் அழுக்கும் இருளும் பட்டு மங்கி இருந்தன. கர்ப்பக்கிருகத்தில் சிற்பி வடித்த சிலைக்குள்ளே உலகைக் காத்து ரட்சிக்கும் ஆண்டவன் ஒளிந்து கொண்டிருந்தார். அவருக்கு முன்னே, பிரகாரத்தில், அவ்வூரின் ஆண்களும், பெண்களும் முதியவரும் குழந்தைகளும், கற்றோரும் மற்றோரும் குழுமியிருந்தனர். […]
மேலும்....