ஜாதி – ஆறு கலைச்செல்வன்

தங்கள் மகன் அழகிரியின் திருமணத்தை விரைவில் நடத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பணியில் தீவிரமாக இறங்கினர் வேங்கடபதி- மதியழகி இணையர். வேங்கடபதி நான்கு ஆண்டுகளுக்குமுன் பணி ஓய்வு பெற்றார். வருமானத்துக்கென்றில்லாமல் தான் பெற்ற கல்வியை மேலும் பலருக்குப் பயன்படச்செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தனியார் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். இரண்டாண்டுகள் பணி செய்த நிலையில் தனது மகன் அழகிரியின் திருமணத்தை நடத்திவிட முடிவு செய்தார். உடனே அதற்கான பணிகளில் இறங்கினர் நண்பர்கள். பலரிடம் இதுபற்றிச் […]

மேலும்....

ஜாதி, மதப் போதை ஒழிப்பு நாள்…- முனைவர் வா.நேரு

ஜூன் 26 என்பது “உலகப் போதை ஒழிப்பு தினம்” மற்றும் “சட்டவிரோதக் கடத்தல் தடுப்புத் தினம்” ஆகும். போதைக்குள் மாட்டிக்கொண்ட மனிதர்களால், அவர்களின் குடும்பம் படும்பாடு சொல்லி மாளாது. இந்தக் கடத்தலைச் செய்பவர்களும் மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்தாம். உழைக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருப்பதைப் போலவே உழைக்காமல் உண்ண வேண்டும் என்று எண்ணுகிற ஒரு கூட்டமும் இந்த உலகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.அந்த மனச்சாட்சி அற்ற கூட்டம்தான் பெண்களையும் குழந்தைகளையும் கடத்துகிறது. போதைப்பொருளை உட்கொள்ளும்போது உட்கொள்ளும் […]

மேலும்....