காலம் தோறும் விபீடணர்கள்!- குமரன்தாஸ்

நமது தமிழ்ச் சினிமாவில் பார்ப்பனர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பார்ப்பனரல்லாத கதாநாயகர்கள் உடனே ஓடோடி வந்து பார்ப்பனரல்லாத வில்லன்களுடன் சண்டையிட்டு அடித்தும் அடிபட்டும் பார்ப்பனர்களைக் காப்பாற்றுவதை நாம் பல திரைப்படங்களில் (திருப்பாச்சி, சாமி, சேது…..) பார்த்திருக்கிறோம். ஏனென்றால் பார்ப்பனர்கள் நல்லவர்கள், அப்பாவிகள், எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்கள் என்றும் காட்டுவார்கள்.ஆனால், இந்த பார்ப்பனரல்லாத ரவுடிகளோ அயோக்கியர்கள், பார்ப்பனர்களையும் அவா ஆத்து பொம்மனாட்டிகளையும் சீண்டுபவர்களாகச் சித்திரித்திருப்பார்கள். ஆகவே, அவர்களிடமிருந்து பார்ப்பனர்களைப் பாதுகாக்க வேண்டியது பார்ப்பனரல்லாத ஹீரோக்களின் கடமையாகும் என்பது […]

மேலும்....

மனித சுதந்திரத்திற்கு எதிரானது ஜாதி!- குமரன்தாஸ்

நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள் – சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் பிள்ளை கோபமாகப் பேசிய அந்தக் காணொளியை! “இவர்கள் யார், எனது வாழ்க்கையில் குறுக்கிட? நான் யாரைக் காதலிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? எனது பெற்றோர்களும் சம்மதித்துவிட்ட பிறகு இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? என்று வயது வந்த (Major) அந்தப் பெண் பிள்ளை எழுப்பிய கேள்விகள் மிகவும் நியாயமானவை. ஆனால், ரத்த உறவையும் தாண்டி அப்பெண்ணின் […]

மேலும்....

கலைஞரின் பேனா வரைந்த திரைச் சித்திரங்கள்… – குமரன்தாஸ்

கலைஞரின் பேனா தொட்டு எழுதாத கருத்துகளே இல்லை என்பது உலகறிந்த ஒன்று. ஆம் தமிழ்ச் சமூகம்,அரசியல்,பொருளாதாரம், பண்பாடு, கலை இலக்கியங்கள் ஆகியவை பற்றி பல ஆயிரம் பக்கங்கள் அவர் எழுதியுள்ளார். அவற்றில் இருந்து அவரது பேனா படைத்திட்ட திரைக் காவியங்கள் பற்றி மட்டும் சுருக்கமாக இங்குக் காணலாம். தலைவர் கலைஞர் 1924 ஜூன் 3ஆம் தேதி திருக்குவளையில் அஞ்சுகம்-முத்துவேலர் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நாம் அறிவோம். அவர் தனது 23 ஆம் வயதில் அதாவது 1947 […]

மேலும்....

இட ஒதுக்கீடும் பார்ப்பனரல்லாதார் மன நிலையும் ! – குமரன்தாஸ்

அண்மையில் காரைக்குடியில் ஒரு கல்லூரியில் மாணவர்களுடன் பேராசிரியர் சுப.வீ. அவர்கள் நடத்திய கலந்துரையாடலின் போது மாணவர் ஒருவர் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். அது வழக்கமானதும் தொடர்ந்து பலராலும், ஒரே ஒரு கிராமத்திலே, ஜென்டில்மேன் போன்ற பல திரைப்படங்களிலும் கேட்கப்பட்டு வருகின்றதுமான ஓர் கேள்விதான்! ‘‘ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்களே பள்ளியில் மாணவர்களிடம் ஜாதியைக் கேட்டு அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ஆதரிப்பது ஏன்?’’ என்ற கேள்வி தான் அது. (இதே போன்றதொரு கேள்வியை சென்னை […]

மேலும்....