ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (பிறப்பு – 15.9.1893)

திரு. சவுந்தரபாண்டியன் அவர்கள் மதுரை மாவட்டம், பட்டிவீரன்பட்டியில், 15.9.1893இல் பிறந்தார். இவரின் பெற்றோர் திரு. அய்ய நாடார் – திருமதி. சின்னம்மாள் ஆவார்கள். மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பும், கல்லூரிக் கல்வியும் பயின்றார். இதன்பின் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அதன்வழி சுயமரியாதை இயக்கத்தில், பெரியார் அவர்களோடு இணைந்து செயல்படத் தொடங்கினார். வெறியோடு சுயமரியாதைக் கொள்கைகளைப் பின்பற்ற முனைந்த இவரை, 1929இல் செங்கற்பட்டு மாநாட்டுத் தலைவராக பெரியார் அவர்களும், இயக்கத்தின் முன்னோடிகளும் தேர்ந்தெடுத்தனர். […]

மேலும்....