நாஸ்திகர்மகாநாடு

— ஈ.வெ.கி. — சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே ஒரு புதுமையானதும், மக்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை உண்டுபண்ணக் கூடியதுமாகும். நாஸ்திகமானது தற்காலம் இந்நாட்டிற் சிலருக்கு மட்டில் புதுமையெனத் தோன்றுமாயினும் இது தொன்றுதொட்டே இருந்து வந்திருப்பதாக நம்மவர்களின் புராண இதிகாசங்களால் விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக இராமாயண காலத்திலும் நாஸ்திகம், கதாநாயகனான ராமனுக்கு உபதேசிக்கப்பட்டதாகவும், அவனால் மறுக்கப் பட்டதாகவும், அவன் மறுத்துவிட்டதையறிந்த உபதேசிகள் அதற்கு அவனின் இளமைப் பருவந்தான் காரணமென்றறிந்து […]

மேலும்....