வீரமணி பத்து- செல்வ. மீனாட்சி சுந்தரம்
அய்யாவின் அம்மாவின் தொண்டறத்தின் நீட்சி! ஆசிரியர் வீரமணி அருந்திறத்தின் மாட்சி! கொய்யாத மலர்தாங்கும் சோலைவனக் காட்சி குளிர்பொங்கும் அருள்முகத்தின் புன்னகைப்பூ சாட்சி! பொய்க்காத கார்ப்பொழிவாய்க் கடனாற்றும் நேர்த்தி! புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் வளையாத சீர்த்தி! உய்வித்த பெரியாரே உருமாற்றம் கொண்டே உலவுகிறார் நம்மிடையே வீரமணி என்று! ஒருபத்து வயதினிலே உயர்மேடை ஏறி உலகத்தின் செவிப்பறையுள் விதைத்தாரே நீதி! பருவத்தின் முன்பழுத்த மலைத்தோட்ட வாழை! பகுத்தறிவு மணம்வீச மடல்விரித்த தாழை! உருவத்திற் கொவ்வாத உரங்கொண்ட காளை! உருக்கிட்டுச் செய்தாரோ உள்ளத்தை […]
மேலும்....