ஆங்கில ஆட்சியின் அடையாள நீக்கமா ? பார்ப்பனிய மீட்டுருவாக்கமா ? – குமரன் தாஸ்

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உச்சநீதி மன்ற நீதிபதிகளது நூலகத்தில் இருந்த நீதி தேவதையின் சிலையை அகற்றிவிட்டு புதிய நீதி தேவதையின் சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவியுள்ளார். அதற்குச் சொல்லப்பட்ட காரணமான காலனியப் பண்பாட்டு நீக்கம் என்பது நமது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் பலரும் பல்வேறு இயக்கங்களும் அன்று 1947க்கு முன் போராடினர். ஆனால் இந்த இயக்கங்களின் போராட்டங்களுக்கான காரணங்களும், சித்தாந்தங்களும் வேறு வேறாக இருந்தன. உதாரணமாக, காங்கிரஸ் கட்சியினுடைய சுதந்திரப் […]

மேலும்....

மொழி என்பது போர்க்கருவி! காலத்திற்கேற்ப மாற்றம் கட்டாயம்! – மஞ்சை வசந்தன்

மொழி என்பது ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவியாய்த் தொடங்கி, காலப்போக்கில் கருத்துக்கருவூலமாய், கருத்து பரப்புக் கருவியாய் வளர்க்கப்பட்டது. காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப கருத்தேற்றங்களும், படைப்பாக்கங்களும் மொழியுள் புகுத்தப்பட்டன. இவை அடுத்து வரும் தலைமுறைக்கு காலக்கண்ணாடியாய் மாறின. மொழியென்று பார்க்கும்போது, மனித இனத்தின் தொல்குடிகளில் தமிழ் மக்கள் பேசிய தமிழே தொன்மையானது, முதலானது ஆகும் என்பது உலகில் உள்ள அனைத்து மொழி அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. காலத்தால் மூத்தது என்பது போல கருத்து வளத்தாலும், வாழ்வியல் தெளிவாலும் நெறியாலும் […]

மேலும்....