மேயர் ந.சிவராஜ்
பட்டியலின மக்களின் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர்விப்பதில் நாட்டம் கொண்டு அதற்காகவே பணியாற்றிய தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ந.சிவராஜ் அவர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1925இல் சென்னை சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து பின்பு பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1918ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 10ஆம் நாள் சுயமரியாதை இயக்க வீராங்கனையான மீனாம்பாள் அவர்களைத் திருமணம் செய்து-கொண்டார். தந்தை பெரியார் முன்னின்று நடத்திய முதலாம் மீனாம்பாள் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பெண்களைத் திரட்டி தீவிரமாகப் போராடியவர். […]
மேலும்....