பிஞ்சு நெஞ்சில் நஞ்சா?- திருப்பத்தூர் ம.கவிதா

செயற்கை நுண்ணறிவுக் காலமிதில் ஜீ(சீ)பூம்பா காட்டும் ஒருவன் சொத்தைக் கருத்துகளைச் சொல்லி வித்தை காட்டும் (மகா)விஷ்ணு! மந்திரங்கள் உச்சரிக்க மழையே நெருப்பாய்ப் பொழியுமாம்! உளறுகிறான் இவ்வாறாய் ஊருக்குள் இக்கிறுக்கன்! ஆகாய விமானத்தில் ஆஸ்திரேலியா போனானா? அஞ்சனை மைந்தனைப் போல் ஆகாயத்தில் பறந்தானா? பாவமாம் புண்ணியமாம் பிறவிப்பலன் கல்வியே ஞானமாம் பெரியார் பிறந்த மண்ணில் பிதற்றுகிறான் என்ன துணிச்சல்? வீறுகொள் மாணவப் பருவத்தைச் சேறுபூசிச் சிதைக்கப் பார்க்கிறான்! ஆன்மிகப் பேச்சென்று அளந்து கொட்டுவோர் வரிசையில் இப்போது இவன் புதுவரவு! […]

மேலும்....

ஆன்மிகக் காலம் அல்ல; ‘Artificial Intelligence’ காலம் !வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

உலகில் எந்தத் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு மிக அவசியம். கையில் பணம் இல்லாமலோ, முதலீடு செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமலோ எவ்விதத் தொழிலையும் தொடங்குவது சிரமமான காரியம். ஆனால், மிகவும் எளிதாக, ஒரு ரூபாய்கூட செலவின்றி தொழிலைத் தொடங்கி, பல கோடி ரூபாய் இலாபம் ஈட்ட முடிகின்ற வாய்ப்பினைப் பெற்ற ஒரே தொழில் “சாமியார் தொழில்” மட்டுமே! யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லாபத்தை ஈட்டித் தரும் இவ்வகை சாமியார் தொழிலுக்கு மிக முக்கியமான இரண்டு […]

மேலும்....