வடமொழி மயக்கறுத்த பல்கலைப் புலவர்- பேராசிரியர் க. அன்பழகன் எம்.ஏ.,

தமிழர்களின் உள்ளம், உரை, செயல் அனைத்திலும் உறையத் தொடங்கிய தாழ்வு மனப்பான்மையை அகற்றவும், பண்டை நாட்களிலே தமிழர் தம் அறிவு பல்வேறு துறையிலும் மேலோங்கிச் சிறந்திருந்தது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து, தாய்மொழியைக் குறித்து ஒரு பெருமித எண்ணத்தோடு தலைநிமிர்ந்து வாழவும் உறுதுணையாக நின்றவர் பல்கலைப் புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களாவார். அவர் இளமையிலேயே தெளியக் கற்று தமிழுடன் ஆங்கிலத்திலும் முது கலைஞராய்த் தேர்ந்து, சட்டத்துறையிலும் பேரறிஞராய்ச் சிறப்புப் பெற்று தாகூர் சட்ட விரிவுரையாளர் என்னும் பெருமையுடன் விளங்கினார். […]

மேலும்....