பெரியார் பேசுகிறார் : நம் ஆயுதம் – ‘விடுதலை’

தந்தை பெரியார் திராவிட மக்கள் உள்ளத்தில் பெருங்குறையாய் இருந்ததும், திராவிட மக்கள் முற்போக்குக்கே பெருந்தடையாய் இருந்தது-மான குறை நீங்கும்படியாக -_ இன்று, ‘விடுதலை’ வெளியாகிவிட்டது. இனி இதை ஆதரித்து வளர்த்து நலனடைய வேண்டியது திராவிட மக்களின் கடமையாகும். திராவிட நாட்டிற்கும், திராவிட மக்களுக்கும் இன்றுள்ள இழி நிலைகளுக்குத் தலையாய காரணங்களுக்குள் முக்கியக் காரணம் என்னவெனில் _ திராவிடர்களுக்கு என்று, திராவிடரிடத்தில் தினசரிப் பத்திரிகை ஒன்றாவது இல்லாததேயாகும். திராவிட நாட்டில் உள்ள தினசரிப் பத்திரிகைகள் யாவும் திராவிடர் அல்லாதவர்-களிடமும், […]

மேலும்....