பொங்கல் நாள் வாழ்த்துரைப்போம்!- முனைவர் கடவூர் மணிமாறன்

தமிழினத்தார் உலகெங்கும் வாழ்கின்றார்! வாழ்வில் தன்மானம் இனமானம் உயிரெனவே காப்பர்! தமிழர்தம் புத்தாண்டின் தொடக்கம்தை முதல்நாள்! தமிழர்க்கு முகவரியும் தமிழ்மொழியே ஆகும்! தமிழரது திருநாளோ பொங்கல்நாள் ஆகும்! தகவார்ந்த உழவர்தம் அறுவடைநற் றிருநாள் தமிழினத்தின் செம்மாந்த மாண்பெல்லாம் காப்போம்! தக்காங்கு தொலைத்திட்ட பண்பாட்டை மீட்போம்! கழனிகளில் விளைந்திட்ட நெல்மணிகள் எல்லாம் களிப்பூட்டச் சோர்வெல்லாம் காணாமல் போகும்! உழக்காலே கடலளக்க முயல்வாரோ நாளும் உறுசெல்வம் ஈட்டுதற்கே உரியவழி நாடும் பழக்கத்தை அதிகாரச் செருக்காலே கொண்டார் பகுத்தறிவுப் பேரொளியைக் கையிரண்டால் […]

மேலும்....