கேட்டுத் தொலைப்பாயா ? ! – திருப்பத்தூர் ம. கவிதா

குழந்தை சுமந்தாள் பத்தியமிரு என்றனர் பத்து மாதம் இருந்தாள் முடித்தாளில்லை… குழந்தை வளர்க்க வாய்மூடி மவுனியாய் பத்தியம் தொடர்ந்தாள் முடித்தாளில்லை… பிள்ளைகள் படிக்க இருபத்து ஆண்டுகள் பத்தியம் தொடர்ந்தாள் முடித்தாளா? இல்லை! மகளுக்கு மகனுக்கு நல்லபடி மணம் முடிக்க வாய்ப்பூட்டுப் போட்டு பத்தியம் தொடர்ந்தாள்! பத்தியத்திற்குள் இருந்திருந்து பழகிப் போய்விட்டது அவளுக்கு! விருப்பையும் காட்டாமல் வெறுப்பையும் காட்டாமல் வெறுமனே கடக்கிறது கிடைத்தற்கரிய ஒரே வாழ்வு! இளமை இப்போது வற்றி இறுக்கி அண்டும் நோயால் மீண்டும் பத்தியக்காரியாய் மருத்துவர்கள் […]

மேலும்....

அரசு தரும் ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பு என்ன தெரியுமா? – திருப்பத்தூர் ம.கவிதா

ஊதியமில்லா உழைப்பை மட்டுமே தன் உடைமையாக்கிக் கொண்டு 50க்கும் 100க்கும் ஆண்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பெண்களையும், பக்கம் உள்ள கடைக்குப் போய் சிறு மளிகைச் செலவு வாங்கவும் சில்லரையின்றி அல்லல்பட்டிருந்த பெண்களையும், தான் பசியோடு இருக்கும் போதும் சிக்கனம் கருதி ஒரு பிஸ்கட் பாக்கெட் தன் குழந்தைக்கு மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பெண்களையும் கேட்டால் தெரியும் – திராவிட மாடல் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயின் அருமை! கேட்டுத்தான் பார்ப்போமே… அய்ந்து ரூபாய் என்றாலும் […]

மேலும்....