உங்களுக்குத் தெரியுமா ?

1960ஆம் ஆண்டு காலகட்டத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட “சோதனைக்குழாய் குழந்தை” பற்றி 1938ஆம் ஆண்டிலேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

பட்டுக்கோட்டை அழகிரி

30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்துத் தொண்டாற்றியவர். அவரது முழு வாழ்க்கையிலும் இயக்கத்தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. விளையாட்டுக்குக் கூடக் கொள்கையை விலை பேசி இருக்க மாட்டார். – தந்தை பெரியார்

மேலும்....

விஞ்ஞானமும் சனாதனமும்… தந்தை பெரியார் …

இன்றைய கூட்டம் வெளியில் மைதானத்தில் நடந்து இருக்கவேண்டும். பல காரணங்களால் அனுமதி கிடைக்காததனால் இங்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். கன்னடத்தில் பேசவேண்டும் என்று சிலரும், தமிழில் பேசவேண்டும் என்று கோருபவர் பலரும் அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். இது பெரிதும் தமிழ் மக்கள் அழைப்பின் பேரில் வந்துள்ளதால் தமிழில் பேசுகின்றேன். தலைப்பு “விஞ்ஞானமும் சனாதனமும்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். இதற்கு தமிழில் ஏற்ற சொல் இல்லை. இதற்கு தமிழில் நான் உணர்ந்தவரை “அறிவும், அறியாமையும்” என்று சொல்லலாம். பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் […]

மேலும்....

எனது பொங்கல் பரிசு – தந்தை பெரியார்

பெரியார் பேசுகிறார் தீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திராவிடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர், தீபாவளியைக் கொண்டாடுவது மானமற்றதும், அறிவற்றதுமான செய்கைதான் என்றாலும் மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென் செய்வது? என்று கேட்ட காலத்தில் பொங்கல் […]

மேலும்....

நமது இலக்கியம் அழிந்த விதம் – தந்தை பெரியார்

ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் இவைகள் தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச்சியோ ஏதாவது இருக்கிறதாக சொல்ல முடியுமா? நமது சமயம் பண்டிகை உற்சவம், கடவுள், வாழ்வு நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறோமா? ஒரு நண்பர் சொன்னார்_ “இந்த நவராத்திரி பண்டிகையும், ஆடிப்பெருக்கு பண்டிகையும் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப்பதற்கும் பயன்பட்டு வந்திருக்கின்றன” என்று. நம் வீட்டில் உள்ள […]

மேலும்....