ஜாதி என்பது சான்றிதழன்று- வாசுகி பாஸ்கர்

2. கோவில் என்பது ஆண் / பெண் / திருநங்கை என்கிற எந்தப் பாலின பேதமுமற்ற இடமாக அறிவிக்கப்பட வேண்டும். அதன் மூலம் பெண்களை மாதவிடாய் தீட்டு என காரணம் சொல்லிப் புறக்கணிப்பது (Untouchability Offence) தீண்டாமைக் குற்ற2மாக ஆக்கப்பட வேண்டும். சமத்துவம் பேசும் ஆண்கள்கூடப் பரவலாக இறை ஊழியத்தில் பெண்கள் / திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவது குறித்தோ, சில கோவில்களில் வழிபாட்டுக்கே உரிமை மறுக்கப்படும் கொடுமைகள் குறித்தோ பேசுவதில்லை. சமத்துவம் என்பது ஆணுக்கு மட்டும் அதிகாரப் […]

மேலும்....

சமத்துவபுரங்களுக்கு எதிரானதே அக்ரஹாரங்கள் அமைக்கும் திட்டம்!

தமிழ்நாடெங்கும் தங்களது பூர்வீக சம்பிரதாயத்தைக் கட்டிக்காக்க பார்ப்பனர்களுக்கென்று ‘‘தமிழகமெங்கும் நமது பூர்வீக அக்ரஹாரம் – வீட்டுமனைகள் மற்றும் கட்டிய இல்லங்கள்’’ என்று பட்டியலிட்டு ‘தினமலரில்‘ (11.8.2024) அரைப்பக்கம் செய்தி – விளம்பரம் வந்துள்ளது. பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா? இதனைப் படிக்கும் எவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக – திட்டவட்டமாக பார்ப்பனர்கள் யார்? அவர்களின் ஜீவசுபாவம் எத்தகையது என்பது விளங்காமற் போகாது! ‘பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் – மாறிவிட்டார்கள் – இப்பொழுதெல்லாம் எதற்குப் பார்ப்பனர்பற்றிப் பேச்சு?’ என்று ‘மேதாவிலாசமாக‘ப் பேசும் அன்பர்களுக்கு, […]

மேலும்....

மனித சுதந்திரத்திற்கு எதிரானது ஜாதி!- குமரன்தாஸ்

நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள் – சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் பிள்ளை கோபமாகப் பேசிய அந்தக் காணொளியை! “இவர்கள் யார், எனது வாழ்க்கையில் குறுக்கிட? நான் யாரைக் காதலிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? எனது பெற்றோர்களும் சம்மதித்துவிட்ட பிறகு இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? என்று வயது வந்த (Major) அந்தப் பெண் பிள்ளை எழுப்பிய கேள்விகள் மிகவும் நியாயமானவை. ஆனால், ரத்த உறவையும் தாண்டி அப்பெண்ணின் […]

மேலும்....

பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்களும் பலன்களும்

1955ஆம் ஆண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து இந்திய தேசியக் கொடியை ஆகஸ்ட் 1ஆம் தேதியில் எரிப்பது எனத் தீர்மானித்தார். இந்தி, தேர்வுக்கான பாடமாக இராது என மத்திய மாநில அரசுகள் உறுதி அளித்ததன் பேரில் கொடி எரிப்புக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார். 1956ஆம் ஆண்டு நாடெங்கும் இராமன் உருவப்படத்தை எரிக்கச் செய்தார். தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தட்சணப்பிரதேசம் என்ற கேடான அமைப்பை எதிர்த்து அதனை இந்திய அரசு கைவிடச் செய்தார். மொழிவாரிப் பிரிவுக்குப் பின் தமிழ்நாடே […]

மேலும்....

கல்வி நிலையங்களில் ஜாதி உணர்வைத் தடுக்க நீதி அரசர் சந்துரு பரிந்துரைகளை ‘திராவிட மாடல்’ அரசின் முதல்வர் நிறைவேற்ற வேண்டுகிறோம் !

கடந்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், சகோதரத்துவம் காப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும் நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு அரசால், ஓய்வு பெற்ற நீதிபதி திரு. கே.சந்துரு அவர்களைக் கொண்டு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் […]

மேலும்....