அய்யா பெரியார் அவர்களை முதன் முதலில் நான் கண்ட நாள் முதலாய்…

சு. பூவராகன் ‘குடிஅரசு’ வார இதழ்களையும், ‘குடிஅரசு’ பதிப்பக வெளியீடுகளையும், படிக்கத் தொடங்கிய நாள் முதலே பெரியாரின் கொள்கைகளும் அவர் தம் கருத்துகளும் என் உள்ளத்தைக் கலக்கி,கடைசியில் அவர்பால் என்னை ஈர்த்துச்சென்றன. 1928இன் பிற்பகுதியில் விழுப்புரத்தில், சங்கராச்சாரியார் முகாம்செய்து ஊரைக் கலங்கடித்துக் கொண்டிருந்த காலை, பெரியார் அவர்களும் அங்கு வந்து இரண்டு மூன்று பொதுக்கூட்டங்களில் பேசிய பொழுது தான், யான் அவருரையை முதன்முதலாகக் கேட்டு மகிழ்ந்தேன். பிறகு, 1929இல் யான் அலுவலகத்தில் பணியாற்றும் காலை, பகல் 11:00 […]

மேலும்....