மனமின்றி அமையாது உலகு (4)

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் இரண்டு வகையான உளவியல் பிரச்சினையில் சிக்கி நான் ஊசலாடியிருக்கிறேன். கேள்வி: 1. அறிஞர் அண்ணா எழுதிய ‘சாது’ சிறுகதையில் வருவது போல முதலாளியிடம் திட்டு வாங்கியதில் உள்ளத்தில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அதைத் தன் மனைவியிடம் காட்டி ஆசுவாசப்படும் தோட்டக்காரனின் மனைவி அவன் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு தன் கோபத்துக்கு வடிகாலாய் குழாயடிச்சண்டையில் ஈடுபடுவாள். உள்ளத்தில் உணர்வெழுச்சிகளைப் புதைத்து அடக்கி வைத்து அதனை சம்பந்தமற்றவர்களிடம் அல்லது கோபம் […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு!மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

மனதின் பண்புகள் மனம் என்பது ஒரு செயல்பாட்டு அலகு (Functioning Unit). அது மூளையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம். மனதின் பண்புகள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? மனம் என்ற ஒன்று ஏன் நமக்கு இருக்கிறது? அதனால் என்ன பயன்கள் என்று பார்ப்போம். ஏனென்றால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால். தான் மனம் நலமாக இருப்பது என்றால் என்ன? மனம் நோய்மையுற்றிருப்பது என்றால் என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடியும். மனதில் மூன்று பரிமாணங்கள் உள்ளன: சிந்தனைகள் […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு!-மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

மனம் என்றால் என்ன? அது எங்கிருக்கிறது? உடலின் மற்ற பாகங்களைப் போல மனம் அதிகமாகப் புரிந்துகொள்ளப்படாததற்குக் காரணம் அதற்கு உருவமோ அல்லது அமைப்போ இல்லாததே!. மனதிற்கும் ஒரு உருவம் இருந்திருந்தால் அதை ஸ்கேன் செய்து பார்த்து நன்றாக இருக்கிறதா இல்லையா என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், அப்படி எந்த உருவமும் இல்லாமலிருப்பதால்தான் அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பதே அத்தனை குழப்பமானதாக இருக்கிறது. மனதிற்கு உருவமில்லையென்றால் அது என்னவாக இருக்கிறது? எங்கிருக்கிறது? மனது என்று ஒன்று […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு!- மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

நலம் என்றாலே நாம் உடல் நலத்தைப் பற்றியே நினைக்கிறோம். உடல் நலமும், மனநலமும் இணைந்தது தான் நல்வாழ்க்கை. ஆனால், உடல் நலத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்திற்குக் கொடுப்பதில்லை. ஏனென்றால், மனதைப் பற்றியும் மனநலன் பற்றியும் பெரும்பாலும் எதிர்மறையான பார்வையையே நாம் கொண்டிருக்கிறோம். மனநலச் சீர்கேடுகளை இழிசொல்லாகப் பயன்படுத்தும் அளவிற்கு அந்தப் பிரச்சினைகளை நாம் அவலமான ஒன்றாகக் கருதுகிறோம். உடலின் வேறு எந்தப் பாகத்தையும் விட மனதைப் பற்றியே ஏராளமான போலிக் கருத்துகளும், பிற்போக்கான பார்வைகளும் இங்கிருக்கின்றன. […]

மேலும்....