கவிதை : வரலாற்றை மீட்போம்!

முனைவர் கடவூர் மணிமாறன் குடியாட்சி மாண்பினையே குழிக்குள் தள்ளிக் குரைக்கின்றார்; குள்ளநரி அரிமா ஆகா! விடியாது நற்பொழுது இவர்க ளாலே! விலங்கனையார் பகுத்தறிவை இழந்த கூட்டம் அடிமையென மக்களையே ஆக்கு தற்கே ஆனவரை வரம்பிகந்து முயலு கின்றார்! வெடிக்கின்ற புரட்சித்தீ பரவும் வேளை வீணர்தம் வெறியாட்டம் அனைத்தும் ஓயும்! கொஞ்சுகிறார் இந்தியினை! புதிய கல்விக் கொள்கையிலே சமற்கிருதம் திணிக்க எண்ணும் நஞ்சனைய செயல்களிலே நாட்டம் கொண்டார்! நலிவுறுத்தும் ‘நீட்‘தேர்வை விலக்க எண்ணார்; நெஞ்சத்தில் வஞ்சத்தைச் சுமந்து நிற்போர் […]

மேலும்....