எக்காலும் பணியாத எழுத்துக்காரன்! – கவிக்கோ துரை.வசந்தராசன்

ஈரோட்டார் எரிமலையின் உரைக்கு ழம்பில் எழுத்துளிகள் எடுத்தாண்டுத் தன்மா னத்தைச் சீராட்டும் தமிழர்க்காய்ச் சிலைவ டித்த சிந்தனையின் உச்சிவானம்! கவிதை யென்னும் பேரேட்டின் தனிமுதல்வன்! பாட்டுச் சிற்பி! பாவேந்தன்! தமிழர்க்காய் உதித்த தாய்மை! கூராட்டிப் பாப்பெய்து இனந லத்தால் கோலோச்சும் அடித்தளத்தை அமைத்த தோழன்! நிமிர்மலையின் வீழருவி தனில்கு ளித்து நெடுங்கணக்குத் தமிழ்மனத்தில் தென்றல் தூவி உமிகளையும் நெல்லாக்கி உயிர்க்க வைக்க உழுவயலில் வீரத்தை விதைத்து வைத்துத் துமியளவும் விலகாத நேர்க்கோ டாக்கும் தொண்டறத்தைப் பெரியார்போல் இவர்தான் […]

மேலும்....

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு

-கவிக்கோ துரை வசந்தராசன் தனித்திருந்த மவுனம்தான் வாய்தி றந்து தந்தமொழி செந்தமிழ்தான்! என்னும் மண்ணில் தனித்தியங்கும் தனிமொழியோ தமிழே தானே! தனித்தியங்கும் மனத்தி னன்யார் தமிழன் தானே! சதிநுழைந்த காரணத்தால் சித்தி ரைக்குத் தாவிவிட்ட தமிழனைநாம் மீட்கும் நாளாய் இனிக்கின்ற கரும்புத்‘தை’ நாள்புத் தாண்டு! இறுத்துங்கள் இதைநெஞ்சில்!இனிக்கும் யாண்டும்! தைதொடங்கி ஆனிவரை ஆறு மாதம் கதிரவன்தன் வடசெலவை நிகழ்த்து கின்றான்! பைநிறைய விதைவிதைக்கும் ஆடி மாதம் பகலவன்தன் தென்செலவை தொடங்கும் மாதம். தைக்கின்ற பனிக்குளிரின் மார்க ழிக்குள் […]

மேலும்....