சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!- முனைவர் கடவூர் மணிமாறன்

அரசர் குடும்பம் தன்னில் பிறந்தவர்; வரலாற் றேட்டில் வாழும் தலைவர்; அன்பினர்; அருளினர் வி.பி. சிங்கோ நன்னெறி பிறழா நயத்தகு நாயகர்! கடமை மறவர்; களங்கம் இல்லார் மடமைப் போக்கை மனத்தில் எண்ணார்! தொண்டறம் தன்னில் தோய்ந்து மகிழ்ந்தவர்! கண்ணியம் மிக்கவர்; கலைஞரின் தோழர்! மக்கள் யாவரும் உரிமை எய்தவே தக்க சமத்துவம் தழைக்கச் செய்தவர்; வெறுப்பை விதைத்து வீண்பழி அடையார்; பொறுப்பாய் அரசியல் சட்டம் மதித்தவர்! விலைபோ கின்ற இழிந்த மனத்தரை விலைக்கு வாங்கும் வெறித்தனம் […]

மேலும்....

புலவர் குழந்தை!- புலவர் கடவூர் மணிமாறன்

எழுச்சிமிகு தமிழ்ப்புலவர்! அறிஞர் போற்றும் இராவணநற் காவியத்தைப் படைத்த ஏந்தல்! பழுதறியாப் பாடல்களால் தமிழர் மேன்மை பழஞ்சிறப்பை, வரலாற்றை விளங்கச் சொன்னார்! குழந்தையிவர் பெயரில்தான்! சீர்தி ருத்தக் கொள்கையுரம் வாய்ந்தஇவர் புலமை ஆழி! முழுதுணர்ந்த தமிழாசான்! தமிழி னத்தின் முடம்நீக்கப் பழிநீக்க முனைந்து நின்றார்! இலங்கையர்கோன் இராவணனைத் தலைவ னாக, ஏற்றமுடன் விளக்குகிற காவி யத்தை உலகெங்கும் வாழ்தமிழர் உவகை எய்த ஒப்பரிய தமிழ்க்கொடையாய் வழங்க லானார்! சிலரிதனைத் தடைசெய்தார்! பின்னர் வந்தோர் சிறுமதியோர் தடைநீக்கி மாண்பைச் […]

மேலும்....

ஏழைப் பங்காளர் காமராசர் !

குலத்தொழில் செய்யச் சொன்ன கொடியரின் இழிவைச் சாடி நலம்தரும் திட்டம் நல்கி நற்றமிழ் இனத்தைக் காத்தார்! இலக்குடன் ஆட்சித் தேரை இயக்கினார் காம ராசர்! பலதொழிற் சாலை கண்டார் பள்ளிகள் திறந்தார் மீண்டும்! பள்ளியில் படிப்போர்க் கெல்லாம் பசித்துயர் பறந்தே ஓட நல்லவர் போற்றும் வண்ணம் நண்பகல் உணவுத் திட்டம் பல்வள அணைக்கட் டுக்கள் பாங்குறக் கொணர்ந்தார்! இல்லார் இல்லமோ இன்பம் எய்த ஏழைப்பங் காளர் ஆனார்! விடுதலைப் போரில் அந்நாள் வெஞ்சிறை ஒன்ப தாண்டாய்ப் படுதுயர் […]

மேலும்....

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி! – முனைவர் கடவூர் மணிமாறன்

டாக்டர் முத்து லட்சுமி அவர்கள் ஊக்க மருந்தென ஒளிர்ந்தார்! போற்றும் முதற்பெண் மருத்துவர் இவரே! பெண்கள் பதவிகள் பெறவே போர்க்கொடி உயர்த்திய மாதர் குலத்தின் மணிவிளக் காவார்! ஜாதி மறுப்பு மணமும் புரிந்தவர்; சென்னை மருத்துவக் கல்லூ ரியிலே பன்னரும் அறுவைப் பண்டுவ முறையில் பயின்ற முதற்பெண் மாணவி இவரே! அயரா வினைஞர்; ஆன்றோர் வியக்கச் சீர்மிகு மாநிலச் சட்ட மன்றில் தேர்வு பெற்றவர் முதற்பெண் மணியாய்! உதவும் குணத்தர்; உயரிய மனத்தர்; பதறிடச் செய்த தேவ […]

மேலும்....