எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (105)

யார் புரட்சிக்கவி? பாரதியா? பாரதிதாசனா? என்ற தலைப்பில் ஜெ.இராமதாஸ் எம்.ஏ.பி.எல்., அவர்கள் விடுதலையில் எழுதியவை: நேயன் தந்தை பெரியாரின் படையில்… பெரியாரின் பெரும் படையில் பல திறத்தினர் பங்கு கொண்டனர். ஆண், பெண், முதியோர், இளைஞர், பாமரர், பணக்காரர், படித்தோர், படியாதோர் அனைவரையும் அவ்வியக்கம் தன்பால் ஈர்த்தது. கல்லூரி கண்ட பலபேர்களைத் தன்வயப்படுத்தியது. கவிஞர் பலரை உருவாக்கியது. அந்தப் படை வரிசையில் முன்னணியிலிருந்தவர்கள், தளபதியாகத் திகழ்ந்தவர்கள் அறிஞர் அண்ணாவும், பாவேந்தர் பாரதிதாசனும் இவர்கள் ‘உலா’வை ‘மூவர் உலா’ […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (104)

பாரதி – யார்? நேயன் “சாதிகள் இல்லையடி பாப்பா’’ என்று பாரதி பாடியதை எடுத்துக்காட்டி போற்று-வோர் உண்டு. பாரதிக்கு முன், காலத்தால் முந்தியும் கருத்தால் ஓங்கி வளர்ந்த வள்ளலார் பாடியதை யார் புகழ்ந்துரைக்கிறார்கள்? வள்ளலார் 1865ஆம் ஆண்டிலேயே ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ நிறுவியவர், அவர் பாடுகிறார். “சாதியு மதமுஞ் சமயமுந் தவிர்த்தேன் சாத்திரக் குப்பையுந் தணந்தேன்’’ என்றும், “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலா மண்மூடிப் போக” என்றும், கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (103) :பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி

நேயன் இந்திய நாடு அனைத்தையும் பாரத நாடு என்று சொல்வதைவிட ஆரிய நாடு என்று சொல்வதில் தான் அவர்க்குப் பெருமையிருந்-திருக்கின்றது. உண்மை அப்படியிருந்து அவ்வாறு அவர் சொல்லிப் பெருமைப்பட்டிருந்-தாலும் தாழ்வில்லை. ‘அவர் உண்மையைத்-தானே சொன்னார்; அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று கேட்கலாம். அவர் உண்மையல்லாத ஒன்றை உண்மைபோல் பலமுறை பன்னிப் பன்னிப் பேசியிருக்கின்றார். இப்படிப் பாடல்களைப் பாடுவதாலும் பலமுறை சொல்வதாலும் வரலாற்று உண்மை-களையே மறைக்க முயற்சி செய்துள்ளார். நாடற்ற ஆரியர்களுக்கு இந்நாடு உரிமை-யுடையது என்றால், […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (102)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில் பாரதி நேயன் பாட்டுத் துறையில் பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே எப்படி அளவிறந்து போற்றப் பெறுகிறார் என்பதை கொஞ்சம் சொல்லித்தான் ஆகல் வேண்டும். அவர் பாட்டுத் திறமை மிகவும் பொதுவானதே. அவருக்கிருந்த கற்பனையாற்றலை வேண்டு-மானால் ஒருவாறு சிறப்பாகச் சொல்லலாம். ஆனால், கற்பனையாற்றல் இருப்பவர்-களெல்லாரும் பாத்திறன் பெற்றிருப்பார்-களென்று சொல்ல முடியாது. பாவலன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய திறமையுள் கற்பனைத் திறனும் ஒன்று. ஆனால் பாத்திறன் என்பது ஒருவன் கற்றுள்ள இலக்கிய நூல்களையும் அவனுக்குள்ள மொழிப் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (100)

பாரதியின் வழக்குரைஞர்கள்! நேயன் பாரதி பிறப்பதற்கு முன்பே, மராட்டிய மாநிலத்தில் கோலோச்சிய ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் மகாத்மா ஜோதிராவ் பூலே (1827_1890) உறுதியுடன் தீவிரமாகப் போராடினார். ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்ததுபோலவே, அவர்களுடைய புராணங்கள், சாஸ்திரங்கள், சனாதன தர்மங்கள், சடங்குகள் போன்றவற்றையும் கடுமையாக எதிர்த்தார். ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி வளர்ச்சி, உழைப்பாளர் உரிமை போன்றவற்றிற்கு அவரும் அவருடைய துணைவர் சாவித்திரியும் களத்தில் இறங்கி தொண்டாற்றி, வெற்றியும் பெற்றனர். பாரதி காலத்திலே, கேரளாவின் திருவிதாங்கூர் பகுதியில், […]

மேலும்....