‘‘நீ எதற்கு எங்களுக்கு ராஜாவாக இருக்க வேண்டும்?’’ தந்தை பெரியாரின் மரண சாசனம்!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை’ என்ற தனது வார்த்தைகளுக்கு, தானே இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், தந்தை பெரியார் அவர்கள். மரணம்  காத்துக்கொண்டிருக்கும் சூழலில்கூட ஒரு மனிதரால் இவ்வளவு பேச முடியும் என்பதும், இத்தனை செய்திகளைப் பதிவு செய்யமுடியும் என்பதும், வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க முடியும் என்பதும், பேசும் ஒவ்வொரு வரியிலும் ஒரு தத்துவம் அடங்கி இருக்கும் என்பதும் வரலாற்றுப் பேரதிசயம் தான்! மறைவதற்கு ஆறு நாட்கள் முன்புகூட ஒரு மனிதரால், தனது கொள்கையை இத்துணை வீரியமாக […]

மேலும்....

கல்விக் கூடங்களில் மூடநம்பிக்கைப் பிரச்சாரமா?

உடனடி நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்குப் பாராட்டு! சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஊக்க உரை (Motivational Speech) என்ற பெயரில் ‘‘பரம்பொருள் பவுண்டேஷன் மகாவிஷ்ணு’’ என்பவர் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஆற்றிய உரையும், அது மாணவிகளிடம் ஏற்படுத்திய தாக்கமும் அந்த நிறுவனமே வெளியிட்ட காணொளியால் நேற்று (5.9.2024) சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குச் சில நாள்களுக்கு முன்பே சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதே போன்ற நிகழ்விலும், […]

மேலும்....

உலகத் தொண்டு நாளும் தீர்வுகளும்-முனைவர் வா.நேரு

அன்னை தெரசாவை நாம் அறிவோம். தெருவில் குளிரில் நடுங்கிக் கொண்டு கிடந்த தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்கள் புண்களுக்கு மருந்திட்டு, அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கான பாதுகாப்பை அளித்தவர். 1910இல் வெளி நாட்டில் (அல்பேனியா) பிறந்த அவர் 1928இல் இந்தியாவிற்கு வருகின்றார். 1948இல் இந்தியக் குடியரிமையைப் பெறுகின்றார். 1950ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ‘மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி’ என்னும் நிறுவனத்தை நிறுவுகிறார்.அதன் மூலம் ஏறத்தாழ ஓர் அரை நூற்றாண்டு காலம் ஏழைகளுக்காகவும்,கைவிடப்பட்டவர்களுக்காகவும் இறக்கும் தறுவாயில் இருப்பவர்களுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். […]

மேலும்....