அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (296)

கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி மறைவு கி.வீரமணி புதுவை ஆளுநர் மாளிகையில் சங்கராச்-சாரியாருக்கு வரவேற்பு அளித்ததுபற்றி, 27.6.1999 அன்று சிதம்பரத்தில் செய்தியாளர்-களிடம் எனது கண்டனத்தைத் தெரிவித்தேன். அதில், ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைப்படியே பா.ஜ.க. இயங்குகிறது. ஆர்.எஸ்.எஸ்.-காரர்களையே பி.ஜே.பி. ஆட்சியில் மாநில ஆளுநர்களாக நியமனம் செய்துவருகிறது. அதில் ஒருவர்தான் புதுவை ஆளுநர் ரஜினிராய் அவர்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்ததன் விளைவு -_ மதச்சார்பின்மைக்கு எதிராக சங்கராச்சாரியாருக்கு புதுவை ஆளுநர் மாளிகையில் (ராஜ் நிவாஸ்) வரவேற்பளித்த செயல். இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (295)

தஞ்சை வருணாசிரம ஒழிப்பு மாநாடு கி.வீரமணி தஞ்சையில் கழக மாநில மாநாடு 23.4.1999, 24.4.1999 தேதிகளில் வெகு உற்சாகமாகத் தொடங்கியது. மாநாட்டிற்குக் குடும்பம் குடும்பமாகக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். காலை 10:00 மணிக்கு திலகர் திடலில் சிங்கப்பூர் நாகரெத்தினம் அரங்கில், தஞ்சை இராசகோபால் பந்தலில் திருவையாறு கோதண்டபாணி நுழைவு வாயிலில் வைக்கம் பவளவிழா வருணாசிரம ஒழிப்பு மாநாடு முதலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் மஞ்சை வசந்தன் வரவேற்றார். மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து வடசேரி இளங்கோவனும், […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (294)

பெரியார் நினைவு சமத்துவபுரம் கி.வீரமணி பிகாரில் ‘பூமிகார் பிராமணர்’ குண்டர் படையின் தொடர் வன்முறையைக் கண்டித்து 12.2.1999 அன்று அறிக்கை வெளியிட்டேன். “பிகாரில் ஜெகனாபாத் பகுதியில் ரண்வீர்சேனை என்ற ‘பூமிகார் பிராமண’ நிலப் பிரபுக்களின் ஏவல் பட்டாளம் மீண்டும், பல தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் குழந்தைகளையும்கூட, இரவு நேரத்தில் அந்த அப்பாவி விவசாயத் தொழிலாளிகள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறபோது, திடீரென்று, மின்னல்போல் தாக்கி, சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டனர். சில வாரங்களுக்கு முன் நடந்த படுகொலைகளின் பச்சை ரத்தம்கூட […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (293)

நாகபுரி சமூகநீதி மாநாடு கி.வீரமணி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (அறக்கட்டளையின்) நிருவாகக் குழு உறுப்பினரும், பெரியார் பெருந்-தொண்டருமான மேட்டூர் டி.கே.இராமச்சந்திரன் அவர்கள் 8.1.1999 அன்று மேட்டூரில் காலமானார் என்பதை அறிந்து வருந்தினோம். அவரின் தந்தையாரே சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் _ பாரம்பரியமாக இயக்க வழி வந்த பண்பாளர். 1954இல் அய்யா தலைமையில் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்துகொண்டவர். தன் பிள்ளைகளுக்கு அம்மா மற்றும் என் தலைமையில் தாலியில்லாமல் இணையேற்பு நிகழ்வுகளை நடத்தியவர். மேட்டூர் மில்லில் பணியாற்றி […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (292)

எம்.ஆர்.ராதா மன்றம் அடிக்கல் நாட்டு விழா கி.வீரமணி டிசம்பர் 5ஆம் நாள் அன்று புதுடில்லியில் நான் தங்கியிருந்த இந்தியா இண்டர்நேஷனல் சென்டரின் இணைப்பகத்தின் 78ஆம் அறையில், இந்திய சமூகநீதி மய்யத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சந்திரஜித், பெரியார் மய்யத்தின் கவுரவ இயக்குநரான முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் டி.பி.யாதவ், புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு.எம்.கே.ஷைனி, புதுடில்லி பிரபல கட்டடக்கலை நிபுணர் (Architect) திரு.ராவ் மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனம் நடத்தும் கஜேந்திர சிங் ராவ், பேராசிரியர் […]

மேலும்....