சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!- முனைவர் கடவூர் மணிமாறன்

அரசர் குடும்பம் தன்னில் பிறந்தவர்; வரலாற் றேட்டில் வாழும் தலைவர்; அன்பினர்; அருளினர் வி.பி. சிங்கோ நன்னெறி பிறழா நயத்தகு நாயகர்! கடமை மறவர்; களங்கம் இல்லார் மடமைப் போக்கை மனத்தில் எண்ணார்! தொண்டறம் தன்னில் தோய்ந்து மகிழ்ந்தவர்! கண்ணியம் மிக்கவர்; கலைஞரின் தோழர்! மக்கள் யாவரும் உரிமை எய்தவே தக்க சமத்துவம் தழைக்கச் செய்தவர்; வெறுப்பை விதைத்து வீண்பழி அடையார்; பொறுப்பாய் அரசியல் சட்டம் மதித்தவர்! விலைபோ கின்ற இழிந்த மனத்தரை விலைக்கு வாங்கும் வெறித்தனம் […]

மேலும்....

உடைக்கப்பட்ட கால்களும்; பறிக்கப்பட்ட பதக்கங்களும்- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

உலகம் முழுவதும் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. ஆதிக்கத்தின் வடிவங்கள்தாம் நாட்டுக்கு நாடு, இடத்திற்கு இடம் மாறுபடுவன. இந்தியாவின் ஆதிக்க வடிவம் வெளிப்படைத் தன்மையற்றது; ஆனால், மிகுந்த வலிமை பொருந்தியது. அத்தகைய ரகசியக் கூட்டாளிகளான பார்ப்பனியமும் பனியாவும் ஒன்றோடு ஒன்று இணைந்த காவி பாசிசம் தான் இன்றைய இந்தியாவின் பேராபத்தான ஆதிக்க நிலை. பார்ப்பனரல்லாத மக்களை கல்வி,வேலைவாய்ப்புகள்,பொருளாதாரம், அரசியல் என்று அனைத்து வகையிலும் அடிமைப்படுத்த பார்ப்பனியம் முயற்சி செய்தபோது அதனை ‘சமூகநீதி’ என்ற குரல் கொண்டு தகர்த்தார், தந்தை பெரியார். […]

மேலும்....

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

வரலாற்றில் புகழோடு வாழு கின்ற வல்லவராம் நல்லவராம் வி.பி.சிங்கோ அரசரது குடும்பத்தில் பிறந்த போதும் அன்பாலும் பண்பாலும் உயர்ந்து நின்றார்! உரத்தநறுஞ் சிந்தனையால் சமூக நீதி உயிர்காக்கும் மாண்பினராய் உலகே போற்றும் அரசியலில் திருப்புமுனை நல்கி நாட்டின் ஆட்சியில்ஏ ழாம்தலைமை அமைச்சர் ஆனார்! தலைமைக்கோர் சரியான எடுத்துக் காட்டாய்த் தாம்திகழ்ந்து மக்களது மதிப்பைப் பெற்றார்! விலைபோகும் இழிந்தோரை விலைக்கு வாங்கும் வெறிகொண்டே அலையாமல் எல்லா ருக்கும் நிலையாகப் பயன்யாவும் நிறைவாய்க் கிட்ட நெகிழ்வுறவே நாட்டோரின் நெஞ்சில் நின்றார்! […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (333)

திருச்சியில் வி.பி.சிங் அவர்களின் கவிதை நூல் (தமிழ் பெயர்ப்பு ) வெளியீடு ! பேராசிரியர் மு.தமிழ்க்குடிமகன் அவர்கள் தமது 66ஆம் வயதில், 21.9.2004 அன்று மதுரையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம். ஒரு காலத்தில் பகுத்தறிவாளர் கழகத்தில் ஈடுபட்டு தீவிர பிரச்சாரப் பணிகளைச் செய்தவர். பின் அரசியலுக்குச் சென்று, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் பதவிகளை வகித்தார். அவரது இணையருக்கு நமது இரங்கல் செய்தியை அனுப்பி ஆறுதல் கூறினோம். பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் கரூர் கே.ஆர். கண்ணையன் அவர்கள் […]

மேலும்....