மாநில வரலாற்று ஆய்வு மன்றம் உருவாக்குவது பற்றி முதல்வர் அறிவிக்கவேண்டும்!

பா.ஜ.க., ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்பொழுதெல்லாம் இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட்டு வருகிறது. புராணத்திற்கும், வரலாற்றிற்கும் வேறுபாடின்றி புராணக் கட்டுக் கதைகளைக் கொண்டு வரலாற்றுக் குறிப்புகள் வடிவமைக்கப்படுகின்றன. முதன்முதலாக பா.ஜ.க., வாஜ்பேயி அவர்களது தலைமையின்கீழ் ஆட்சி அமைத்த வேளையில், அப்பொழுது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி, சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை மாற்றி அமைத்திடும் பணியில் முயன்று தோல்வி கண்டார். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த ‘காளை மாடு’ […]

மேலும்....