முத்தமிழறிஞர் கலைஞர்

“டாக்டர் கலைஞர் அவர்கள் பள்ளியை விட்டு வாலிபப் பருவத்திலேயே என்னோடு தொண்டு செய்ய வந்துவிட்டார். பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் என்னோடு சேர்ந்து பல இன்னல்களையெல்லாம் ஏற்றார். தன் வாழ்நாள் ஒவ்வொன்றிலும் மக்கள் நலம் பற்றிச் சிந்திப்பதிலும் தொண்டாற்றுவதிலுமே நடப்பதை நான் மனப்பூர்வமாக உணர்கிறேன். மனம் பூரித்து திருப்தி அடைந்து வருகிறேன். மற்றவர்கள் சிந்திக்கக்கூட பயப்படும்படியான காரியங்களை வெகு எளிதில் செய்து முடித்து விடுகிறார்”. – தந்தை பெரியார்

மேலும்....

கடவுள் என்பது ஒரு பொருளா?- தந்தை பெரியார்

அறிஞர்களே! நீங்களும் நாங்களும் இன்று 1968ஆம் ஆண்டில் பகுத்தறிவு விஞ்ஞானக் காலத்தில் வசிக்கிறோம்; அதன் பயனாய் நான் கடவுள் இல்லை என்றும் அது அறிவில்லாத காலத்து முட்டாள் மனிதனது கற்பனை என்றும் சொல்லுகிறேன். இந்தப்படி நான் 50, 60 வருஷங்களாகச் சொல்லி வருகிறேன். மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம் நான் சொல்லுவது ஒருபுறம் இருந்தாலும் கடவுளைப் பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் “3000 ஆண்டு”க்கு மேல் “5000 ஆண்டுக்குள்” இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் […]

மேலும்....

இந்தியாவுக்கு ஏற்ற மே தினம் எது ? – தந்தை பெரியார்

மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை. ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான […]

மேலும்....

உயிரைக் கொடுத்தும் சமதர்மம் காப்போம் ! – தந்தை பெரியார்

சமதர்மம் என்பது பேத தர்மத்துக்கு மாறான சொல். இந்த இடத்தில் நாம் அதை எதற்குப் பயன்படுத்துகின்றோம் என்றால், மனித சமுதாய வாழ்க்கைக்கு – மனுதர்மத்திற்கு எதிர்தர்மமாகப் பயன்படுத்துகின்றோம். மனித சமுதாயத்தில் பேதநிலை இருக்க வேண்டும் என்பதற்காகவே மனுதர்மம் செய்யப்பட்டது. பேத நிலைக்குக் காரணம் என்ன? சமுதாயத்தில் பேத நிலையானது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. ஒன்று : மனிதன் பிறவியில் உயர் ஜாதியாய் அல்லது தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கின்றான் என்பது. இரண்டு : […]

மேலும்....

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு : 21.4.1964

‘‘வள்ளுவரைவிட புதுமையான புரட்சி யான கருத்துகளை- மக்களை பகுத்தறிவு வாதிகளாக்கக்கூடிய கவிதைகளை எழுதி யவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார். கடுகளவு அறிவுள்ளவன் கூட அவர் கவிதையைப் படித்தால் முழுப் பகுத்தறிவுவாதியாகிவிடுவான்.’’ – தந்தை பெரியார் (’விடுதலை’ 29.04.1971)

மேலும்....