ஆசிரியர்: பெரியார் நமக்களித்த கொடை!- கோவி.லெனின், இதழாளர்

‘‘எங்களிடம் இருப்பது பெரியார் கொடுத்த அறிவு’’ – மானமிகு ஆசிரியர் அவர்கள் அடிக்கடி மேடையில் அழுத்தமாகச் சொல்லும் சொற்கள் இவை. 1990களில் பெரியார் திடலில் நடைபெற்ற பல சொற்பொழிவுகளில் ஆசிரியரிடமிருந்து இந்தச் சொற்கள் வெளியாகும். புத்தாயிரம் ஆண்டுகளில் திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்கக் கருத்துகள், இயக்கங்களின் போக்குகள் இவை குறித்து மூத்த பத்திரிகையாளரும் திராவிடச் சிந்தனையாளரும் ஆசிரியர் அவர்களால் அக்கிரகாரத்து அதிசய மனிதர் இவர்தான் எனப் புகழப்பட்டவருமான சின்னகுத்தூசி தியாகராசன் அவர்களின் அறையில் ஆரோக்கியமான வாதப் போர்கள் […]

மேலும்....

கலைஞரின் ‘குடிஅரசு’ குருகுலம் – கோவி.லெனின், இதழாளர்

‘வாழ்வின் வசந்தம்‘ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது, தந்தை பெரியாருடன் அவர் இருந்த காலத்தைத்தான். முத்தமிழறிஞர் கலைஞர் ‘பசுமையான காலம்’ என்று குறிப்பிடுவது ஈரோட்டில் பெரியாரின் ‘குடிஅரசு’ ஏட்டில் பணியாற்றிய காலத்தைத்தான். கலைஞரின் நூற்றாண்டு நிறைவடையும் நேரத்தில், ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தனது கொள்கைகளை மக்களிடம் தெரிவிக்க ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகையை நடத்தியது. அதனால் அந்த அரசியல் அமைப்பை ஜஸ்டிஸ் கட்சி […]

மேலும்....

சுயமரியாதை இயக்கம் – ஊடகவியலாளர் கோவி.லெனின்

ஜஸ்டிஸ் என்ற பெயரில் பத்திரிகை நடத்தியதால் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை ‘ஜஸ்டிஸ் பார்ட்டி’ என்று பொதுமக்கள் அழைக்க, அது தமிழில் ‘நீதிக் கட்சி’ என்று பெயர் பெற்றுவிட்டது. திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிமாணமான சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் என்பது ‘குடிஅரசு’ பத்திரிகை தொடங்கப்பட்ட நாளினையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் சீடராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்த தந்தை பெரியார், கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ சாமி கோயில் அமைந்துள்ள தெருவில் நடக்க […]

மேலும்....

அவாள் ஏடுகளுக்குச் சவால் திராவிட இயக்கப் பொங்கல் மலர்கள்!

கோவி.லெனின்   நமஸ்காரம் என்பது வணக்கம் என மாறியதிலும், ஸ்ரீமான் – ஸ்ரீமதி போன்றவை திரு – திருமதி என்ற வழக்கத்திற்கு வந்ததிலும், விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை என்பது திருமண விழா அழைப்பிதழ் என அச்சிடப்பட்டதிலும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு எந்தளவு சிறப்பானதாக உள்ளதோ அதுபோலத்தான் சங்கராந்தி எனப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லப்பட்டு வந்த நம் பொங்கல் நன்னாளை, பண்பாட்டுப் பெருமை மிக்க தமிழர் திருநாள் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருவதிலும் திராவிட இயக்கத்தின் […]

மேலும்....

பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றிய பின்.. இவரோ…

… கோவி.லெனின் … இது கலைஞர் நூற்றாண்டு. அவருடைய இளவலான தமிழர் தலைவர் – தகைசால் தமிழர் ஆசிரியர் அய்யாவுக்குத் தொண்ணூறு நிறைவடைகிறது. திராவிட இயக்கம் அடிப்படையில் சமூக நீதி இயக்கம். அது பயணிக்கும் வழி, பகுத்தறிவு. அதில், திராவிடர் கழகம் நாத்திகத்தைப் பரப்புகின்ற இயக்கம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணாவும், முன்னேற்றக் கழகத்தை அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்கி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞரும், அவர்கள் இருவருக்கும் உற்ற துணையாக விளங்கிய இனமானப் […]

மேலும்....