மக்களை நிரந்தர முட்டாளாக்கும் ஜோதிடப் பித்தலாட்டத்தை தொடர விடலாமா?

ஜோதிடம் என்பது புரட்டு; மகாபுரட்டு என்பது அன்றாடம் ஜோதிடத்தின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைக்கின்ற கூட்டத்தின் பொய்மை மூலம் நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு வந்தாலும்கூட, மீண்டும் தொடர்ந்து மக்கள் சூதாட்டத்தில் எப்படி மீண்டும் மீண்டும் ஏமாந்து இழப்புகளைச் சந்திக்கிறார்களோ, அப்படியே ஜோதிடத்திலும் தொடருவது மனிதனின் பகுத்தறிவுக்கும் தன் மதிப்புக்கும் எதிரானது; கேலியும் வெட்கமும் அடைய வேண்டிய அவமானமும்கூட! வானவியல் (Astronomy) என்பது அறிவியல் ; ஜோதிடம் (Astrology) என்பது போலி அறிவியல். அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் […]

மேலும்....

கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஜனநாயக முறையில் ஏற்றுக் கொண்டு சட்டமுன்வடிவு செயலாக்கத்தை நிறுத்திவைத்த முதலமைச்சருக்கு நன்றி!

கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பணி, உரிமைகள், சலுகைகளுக்கு எதிரான அம்சங்களைக் கொண்ட சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கோரிக்கையை ஜனநாயகப் பண்போடு நிறுத்தி வைத்த முதல் அமைச்சருக்குப் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரம் உள்ளிட்ட, ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு என்று இருந்த உரிமைகள், சலுகைகள் பறிப்பு உள்ளிட்ட […]

மேலும்....

மனிதர்களைத் தொடாமல் மாட்டை கட்டிப்பிடிப்பது எந்த தர்மம்?

நமது நாடு மதச்சார்பற்ற நாடு (Secular State) அரசுகள் (ஒன்றிய, மாநில அரசுகள் எந்த ஒரு மதத்தினையும் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தக்கூடாது. நடத்தினால் அது அரசியல் விரோத நடவடிக்கையாகவே கொள்ளப்படும். ஆனால், 2014இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பா.ஜ.க. பிரிவான – எப்படியோ ‘வளர்ச்சி’ முகமூடியைப் போட்டு – ஆட்சியைப் பிடித்து, அடுத்த தேர்தலிலும் அதே வித்தைகளை வேறு விதமாகக் கையாண்டு பெருத்த (ரோடுரோலர் மெஜாரிட்டி) இடங்களைப் பெற்றதால், பகிரங்கமாகவே ‘ஹிந்து ராஷ்டிர ஆட்சியாகவே நடத்தி வரத் […]

மேலும்....

தலையங்கம் – எங்கும் அமைப்போம் “பெரியார் வீர விளையாட்டுக் கழகங்கள்!’’

  தஞ்சையிலும் திருச்சியிலும் (21, 22-1-2023) நாள்களில் நடைபெற்ற மாநில திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல், திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் ஆகியவற்றிற்கு  குறுகிய கால அறிவிப்பானாலும்கூட ஏராளமான மாணவ, இளைஞரணித் தோழர்கள், திரண்டு வந்து, உற்சாகத்துடன் பங்கேற்றது கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தோம். எதையும் எதிர்பாராமல் ‘மானம் ஒன்றே நல்வாழ்வெனக் கருதி’ உழைக்கும் கொள்கைச் செல்வங்களின் அகமும் முகமும் மலர்ந்திருந்தது, நம்மை ஒருவகை புத்தாக்கத்திற்காளாக்கியது! பெரியாரைச் ‘சுவாசிக்கும்’ இன்றைய இளைய தலைமுறையினர் அவர்கள் என்பதால், […]

மேலும்....