கண்ணியத்தின் உறைவிடம் கலைவாணர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

நாடறிந்த கலைவாணர் சான்றோர் போற்றும் நற்குணத்தர்; உயர்மனத்தர்! வாழ்நாள் எல்லாம் பீடார்ந்த அறிவியக்கப் பாதை சென்ற பெற்றியராய் எளியோரின் நிழலாய் அன்னோர் கேடெல்லாம் நீங்கிடவே துணையாய் நின்றார்! கேட்போர்க்கு மறுப்பின்றிக் கொடையை நல்கி ஈடற்ற புகழ்குவித்தார்! இழிந்த நெஞ்சர் இடக்கெல்லாம் வீழ்த்திடவே எதிர்த்து வென்றார்! கொஞ்சுதமிழ்ப் படங்களிலே புதுமை சேர்த்தார் குடியரசாம் இதழ்படித்தே பெரியார் கொள்கை நெஞ்சாரப் போற்றுகிற மாண்பைப் பெற்றார்! நினைவெல்லாம் தமிழரது மேன்மை என்றார்! வஞ்சகத்தார் விரித்திட்ட வலையில் வீழா வல்லமையைப் பெறவேண்டி உழைத்தார்! […]

மேலும்....

நெஞ்சில் வாழ்வார் கலைவாணர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

நகைச்சுவையின் பேரிமயம்! சிரிப்பால் நாட்டு நடப்புகளைச் சிந்திக்கத் தூண்டி வந்தார்! தகைசான்ற மழையுள்ளம் வாய்க்கப் பெற்றார்; தக்கோர்க்குத் தயங்காமல் வழங்கி வந்தார்! பகையாக எவரையுமே எண்ணார்! நாளும் பச்சைஅட்டைக் ‘குடியரசு” இதழின் மூலம் வகைதொகையாய்ப் படித்துணர்ந்து பெரியார் கொள்கை வளம்சேர்க்கும் என்பதனால் வளர்த்துக் கொண்டார்! கலைவாணர் தமிழர்தம் அன்பைப் பெற்றார்; கண்ணியத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்து வந்தார்! நிலைமாறாப் பேருள்ளம் பெற்றார்; மாந்த நேயத்தைக் கடைப்பிடித்த நேர்மைத் தொண்டர் கலையுலகில் முடிசூடா மன்ன ராகக் காலமெல்லாம் கோலோச்சி வந்தார்! […]

மேலும்....