கட்டுரை: பெரியாரும் திராவிட நாடும்

ஆ.வ.ப.ஆசைத்தம்பி தொகுத்தது திராவிடர்களின், தமிழர்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ள விரும்பு-கிறவர்கள்; முதலாவது திராவிட நாடு ஒரு தனி நாடு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். திராவிட நாட்டின் எல்லைகளைக் குறிப்பது கஷ்டமில்லை. இயற்கை திராவிட நாட்டைச் சுற்றி மூன்று பக்கங்களில் சமுத்திரங்களையும் ஒருபுறம் விந்தியமலையையும் நிறுத்தி வைத்திருக்கிறது. திராவிட நாடு தெளிவாக ஒரு தனிப்பட்ட சமூகத்தையுடையது. திராவிட மொழியான தமிழ்மொழி எத்தனை பிரிவாய்ப் பிரிந்திருந்தும் ஆரியரோடு சம்பந்தப்படாமல் ஒரு தனிப்பட்ட இனமாக இருப்பதற்கு தமிழ் மொழியின் தன்மைக்கு நான் வந்தனம் செலுத்துகிறேன். […]

மேலும்....