பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்…- தஞ்சை பெ. மருதவாணன்

இங்கிலாந்து நாடு ஈன்ற இணையற்ற நாத்திகப் பெரியார்! உலகப் புகழ் பெற்ற கணித மேதை! சமரசமற்ற அஞ்சா நெஞ்சங்கொண்ட தற்சிந்தனையாளர்! அறிவியல் மனப்பான்மை மிக்க தத்துவஞானி! உலக அமைதிக்காகப் பணியாற்றிய (Pacifist) போர் ஒழிப்புக் கோட்பாட்டாளர்! உலகின் பல நாடுகளிலும் சுழன்றுலவி அணுஆயுத ஒழிப்புக் குரலை ஓங்கி ஒலித்த மனித நலக்காப்பாளர்! கடவுள், மத, மூடநம்பிக்கை எதிர்ப்பில் வாழ்வின் இறுதிவரை உறுதியாகப் பற்றி நின்ற பெற்றியர்! மதவெறியர்கள் இழைத்த இடையூறுகளுக்கு அஞ்சாமல் பகுத்தறிவுப் பாதையில் தொடர்ந்து பயணம் […]

மேலும்....

கடவுள் என்பது ஒரு பொருளா?- தந்தை பெரியார்

அறிஞர்களே! நீங்களும் நாங்களும் இன்று 1968ஆம் ஆண்டில் பகுத்தறிவு விஞ்ஞானக் காலத்தில் வசிக்கிறோம்; அதன் பயனாய் நான் கடவுள் இல்லை என்றும் அது அறிவில்லாத காலத்து முட்டாள் மனிதனது கற்பனை என்றும் சொல்லுகிறேன். இந்தப்படி நான் 50, 60 வருஷங்களாகச் சொல்லி வருகிறேன். மக்கள் பக்குவப்படாத (காட்டுமிராண்டி) காலம் நான் சொல்லுவது ஒருபுறம் இருந்தாலும் கடவுளைப் பற்றி மக்கள் அறிய நேர்ந்தது சுமார் “3000 ஆண்டு”க்கு மேல் “5000 ஆண்டுக்குள்” இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். நீங்களும் […]

மேலும்....