வாசகர் கடிதம்

நாட்டில் எண்ணற்ற வார-மாத இதழ்கள் கடை வீதிகள் மற்றும் பேருந்து-ரயில் நிலையங்களில் கண்கவர் வண்ணங்களில் தோரணங்களாய் அணிவகுத்து நின்றாலும், அவற்றில் உண்மைச் செய்திகளை மட்டுமே தாங்கி வெளிவருகின்ற மாதமிருமுறை இதழான “உண்மை’’ இதழை தேடிப் பிடித்து வாங்கிப் படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு, இணை ஏதுமில்லை. இளைஞர்களுக்குப் பயன்படும் சமுதாயச் சிந்தனைகள், பகுத்தறிவுக் கருத்துகள் தாங்கி வெளிவரும் இதழ் ‘உண்மை’ மட்டுமே! “அமைதிப் பூங்காவில் வம்பை விதைக்கலாமா?’’ ஆசிரியரின் தலையங்கம் இன்றையச் சூழலில் பா.ஜ.க. நடவடிக்கைகளுக்கு கடிவாளமிட […]

மேலும்....

தேன் பற்றி -தேனான செய்திகள்! – 2

ஓர் இளநீரில் ஒரு துண்டு இஞ்சியை நசுக்கிப் போடவேண்டும். அதில் மூன்று டேபிள்ஸ்பூன் தேன், ஒரு எலுமிச்சையின் சாறு சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து (காலையில்) கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்து ருசித்துக் குடிக்க வேண்டும். இதை எல்லா வயதினரும் தொடர்ந்து குடித்து வந்தால் எல்லா நோய்களின் தீவிரமும் குறையும். இளமையுடன் இருக்க விரும்புபவர்கள் தினமும் சுத்தமான தேனை அருந்த வேண்டும். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக தேன் அருந்தி வரவேண்டும். ஒரு டீஸ்பூன் தேனைச் சாப்பிட்டால் […]

மேலும்....

நாட்டாண்மைக்கு ஒரு நல்ல தீர்ப்பு !

துறையூர் க.முருகேசன் “ஏண்டி செல்லம்மா! எங்கடி போனாள் மாலதி? நான் எத்தனை நாள் சொல்லிருப்பேன். அந்த நாய வீட்ட விட்டு வெளிய அனுப்பாதடி. அவளால நம்ம குடும்பமானமே, கப்பலேறுதுன்னு… கேட்டியாடி? நேத்து சாய்ந்தரம் நாலுமணி போல அவளும், அந்த கீழத் தெரு முத்தான் மகன் கணேசனும், ஒன்னா உட்கார்ந்து சினிமா பார்த்துகிட்டு இருந்தத நம்ம சுப்பையா மாமா கண்ணாலப் பார்த்து இருக்குறார். ஒரு கலர் சோடாவ வாங்கி இவன் பாதியாவும், அவள் பாதியாவும் குடிச்சாங்களாம். அந்த பண்ணாடி […]

மேலும்....

வரதட்சணை

மாப்பிள்ளைச் சந்தையில்மணமகள் விலை!    மாமியார் பார்வையில்    வருவாயின் தலை! மணக்கின்ற ஆணுக்குமரியாதை நிலை!     கொடுக்கின்ற தந்தைக்கு    கொடுமையின் உலை! கொண்டுவரும் பெண்ணுக்குகுறைந்திடில் கொலை!     புரிந்ததா பெண்ணே!    தெரிந்ததா கண்ணே! பொன்னைக் கேட்கும்புல்லரைப் புறந்தள்ளி     உன்னைக் கேட்கும்    உயர்ந்தோனை மணம்முடி! பட்டம் பதவியில்பகட்டுதான் உண்டு!     பாசம் பற்றில்தான்    பளிச்சிடும் வாழ்வு!

மேலும்....

காவிரி நீர்ப் பங்கீட்டில் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உடன் செய்ய வேண்டியவையும்!

மஞ்சை வசந்தன்     தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ்  மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ஆம் ஆண்டில் முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1924-ஆம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அது 1973-இல் காலாவதியானதால், மீண்டும் சிக்கல் எழுந்தது. காவிரி நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வது […]

மேலும்....