“தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்’’ எனும் கருத்துக்கு ஒப்புரவளிக்கும் வள்ளலார்

ஓர் ஆண்டினை வடபுலம், தென்புலம் என இரண்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். வடபுலம் (உத்தராயன்) – தை முதல் ஆறு மாதங்கள் பகற்பொழுது அதிகம். தென்புலம் (தட்சிணாயனம்) -ஆடி முதல் ஆறு மாதங்கள் இராப்பொழுது அதிகம். இதனை ஒளிப்பக்கம், இருட்பக்கம் என்பர். ஒளி – அறிவுடைமை, ஞானம்; இருள்-அறியாமை, அஞ்ஞானம்; ஒளி- சுவர்க்கம்; இருள் – நரகம். இருளினின்றும் நாம் ஒளிக்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானத்தினின்றும் ஞானத்திற்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதிக்க வேண்டும். அறியாமை […]

மேலும்....

பறை

முனைவர் மு.வளர்மதி பறையின் தோற்றம் மனிதன் காடுகளில் அலைந்து திரிந்து காய், கனி, கிழங்கு, விலங்கு, பறவை போன்றவைகளை வேட்டையாடி உணவாகக் கொண்டு வாழ்ந்த காலத்திலேயே ஒரு சில இயற்கையான மழை, இடி ஆகியவற்றின் ஓசை, இலைகளின் சலசலப்பு, பறவைகளின் குரல், கடலலைகளின் பேரொலி, மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியாகச் சென்ற காற்றால் எழுந்த ஓசை ஆகிய அனைத்தையும் இசையாக உணர்ந்தான்.“ஆடமைக் குயின்ற வவிர்துளை மருங்கிற்கோடை யவ்வளி குழலிசை யாகப்பாடி னருவிப் பனிநீர் இன்னிசைத்தோடமை முழவின் […]

மேலும்....

தந்தை பெரியாரின் தொலைநோக்கு – 8

காமராஜர் பதவி விலகல் பற்றி அய்யாவின் தொலைநோக்கு!     காமராசர் அவர்கள், ‘கே_பிளான்’ என்று ஒரு திட்டத்தைக் கூறினார். அதன்படி வயதால் முதியவர்கள் பதவி விலகி, காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாய் நானே பதவி விலகுகிறேன் என்று சொல்லி பதவி விலக முடிவெடுத்தார்.  அப்போது தந்தை பெரியார், “நீங்கள் பதவியை விட்டுச் சென்றீர்களேயானால், அது உங்களுக்குத் தற்கொலை முயற்சி. இந்த நாட்டிற்கும் கேடு!’’ என்று அவசரத் தந்தி கொடுத்தார் பெரியார். அன்றைக்குக் காமராசர் […]

மேலும்....

(இயக்க வரலாறான தன்வரலாறு – 195)

மம்சாபுரத் தாக்குதலும்மக்கள் கொந்தளிப்பும்!  வடசென்னை-ராயபுரம் தி.க. சார்பில் வேண்டுகோள் அறப்போர் விளக்கப் பொதுக்கூட்டம் 18.06.1982 அன்று தந்தை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதிய பேருந்து துவக்க விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாத் தொடக்கத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி வைதேகி கண்ணன் அவர்கள் பள்ளிக்கு பேருந்து வாங்க சோழன் போக்குவரத்துக் கழகத்துடன் ஒரு வருட காலமாக கடிதப் போக்குவரத்து கொண்டதை பாராட்டி பேருந்து வாங்க எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளைக் […]

மேலும்....

பக்தியின் உச்சம் பைத்தியம்!

மு.சி.அறிவழகன் ஆசிரியர், கைத்தடி மாத இதழ் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் மலை அடிவாரத்தில் சாமை புல்லால் பின்னப்பட்ட கூரை வீடு அந்த ஊரில் மதிக்கத்தக்க ஒரு பெரிய மனிதர் வசித்து வந்தார்.  அனைவராலும் மதிக்கத்தக்க காரணம் அவருக்கும் கடவுளுக்கும் நேரடித் தொடர்பு. அந்தக் கிராமத்தைத் தாண்டி பக்கத்துக் கிராமத்தில் உள்ள குழந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என்றால் கூட அவரை நாடித் தான் வருவார்கள் மருத்துவரைக் கூட பிறகுதான் பார்ப்பார்கள். முதலில் இவரைத் […]

மேலும்....