ஜாதி பற்றிய உச்சநீதிமன்ற இரண்டு தீர்ப்புகளும் கழகத்தின் நிலைப்பாடும்!

நம் நாட்டு உச்சநீதிமன்றத்தில் இம்மாதம் இரண்டு முக்கியத் தீர்ப்புகள் வந்துள்ளன. அவை நமது சமூகத்தில் நிலவும் ஜாதி, வர்ணதர்மத்தினை அப்படியே படம்பிடித்துக் காட்டும் தீர்ப்புகள் ஆகும்!ஒன்று, கேந்திரிய வித்தியாசாலைப் பள்ளியில் பணியில் சேர்ந்து வேலைபார்த்த ஒருவர், அதுவும் அப்பள்ளியின் துணை முதல்வராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய ‘அகர்வால்’ ஜாதியைச் சேர்ந்த ஒருவர். தாம் திருமணம் செய்து கொண்டது, தாழ்த்தப்பட்ட ‘தலித்’ ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர் என்பதைக் காட்டி அப்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியது […]

மேலும்....

தமிழை நீசபாஷை என்று சொல்லும் மகாபாவிகளும் பார்ப்பனர்களில் இன்றும் உண்டு

திராவிட நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அத்தனைப்பேரும் பித்தலாட்டக்காரர்கள், வஞ்சனைக்காரர்கள்; தமிழுக்கு, தாய்நாட்டு மொழிக்குத் துரோகிகள் என்பதற்கு அவர்கள் சுதந்திரம் வருமுன்பே இந்தியை ஆதரித்ததும், வரவேற்றதும், இந்த நாட்டில் பள்ளிகள் வைத்துப் பரப்பியதும் – அரசியலின் மூலம் இந்திக்கு ஆக்கமும் ஆதரிப்பும் செய்ததான காரியங்களின் மூலமே விளங்கவில்லையா? ஆச்சாரியார் தன்னைத் தமிழர் லிஸ்டில் சேர்த்துக்கொள்கிறார். அவர் கோஷ்டி பத்திரிகாசிரியர்கள் தங்களைத் தமிழர் கோஷ்டியில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஒருகாலத்தில், இப்போது அய்க்கோர்ட் ஜட்ஜுகளில் பச்சைப் பார்ப்பனராக இருக்கும் ஜஸ்டிஸ் ஏ.எஸ். […]

மேலும்....

செயலி

Improve English: Word Games இச்செயலி ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உரையாட உதவும். இதில் பாடங்களை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். இதிலுள்ள விளையாட்டுகள் மூலம் ஆங்கில இலக்கணம், சொற்கள் ஆகியவற்றை எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் பல சொற்கள் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கும். அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவும். 50 லட்சத்துக்கும் அதிகமான சிறு சிறு பகுதிகளாக பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்தச் செயலியில் நான்கு லட்சம் விளையாட்டுகள் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. goo.gl/fpyp1v  or  […]

மேலும்....

டார்வின்

பிறந்த நாள்: 12 பிப்ரவரி 1809 அறிவியல் உலகத்தில் மகத்தான கண்டுபிடிப்பு என்பது – விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கையாகும். அதுவரை மதம் நம்பி வந்த, கற்பித்துவந்த கடவுள் படைப்புக் கொள்கைக்கு மரண அடி கொடுத்த மாமனிதர் அவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்தவர். விலங்கியல், தாவரவியல் துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். கப்பலிலேயே சுற்றி பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்று, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். 1859-இல் அவரால் எழுதப்பட்ட “உயிரினங்களின் தோற்றம்’’  (Origin of species) எனும் நூலும், […]

மேலும்....

1928இல் சமூகத்தில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்

மதுரை ஜில்லா, உத்தமபாளையம் தாலுகா, ஆண்டிப்பட்டி போஸ்டாபீசானது அக்கிராமத்துக்குள் வைக்கப்பட்டும் பிராமணர் போஸ்ட் மாஸ்டராக நியமிக்கப்பட்டு மிருப்பதால் பஞ்சமர்கள் மேற்படி போஸ்டாபீசுக்குள் வரக்கூடாதென்றும் வெளியில் சுமார் கால் பர்லாங்கு தூரத்திலேயே நின்று மேற்படி போஸ்டாபீசுக்கு தடையன்னியில் வரக்கூடிய ஆசாமிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாகத்தான் பஞ்சமர்கள் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன பெற்-றுக்கொள்ள வேணுமென்றும் செய்திருப்பது மிகப் பரிதாபமாகயிருக்கிறது. பஞ்சமர்களுக்கு கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன தேவையாயிருந்தால் அவர்கள் அக்கிரகாரத்துக்குள் தாராளமாய்ப் பிரவேசிக்கக் கூடிய ஆசாமிகளை தேடிப் பிடித்து […]

மேலும்....