ஏன் அவர் பெரியார்? “பெரியார் பட்டம்” அளித்தவர்கள் பார்வையில்…

 வழக்குரைஞர் கிருபா முனுச்சாமி (சென்ற இதழின் தொடர்ச்சி…) சுயமரியாதை திருமணம்: தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதன் ஒரு படியாக, ஆண்_பெண் இருபாலரின் சரிநிகரான உரிமைகளையும், சுதந்திரங்களையும் பாதுகாக்கும் வகையில், தாலி இல்லாத ஜாதி, -மத மறுப்பு சுயமரியாதை திருமணங்களை வலியுறுத்தினார். இன்று ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற பற்பல நாடுகளில் நண்பர்களாக வாழும் முறையே பெரிதும் காணப்படுகிறது. அதுபோல, நம் நாட்டிலும், “திருமணம் செய்து கொள்ளாமலேயே நண்பர்களாக வாழும் முறை வரவேண்டும்’’ […]

மேலும்....

மதச்சார்பற்ற அணி மகத்தான வெற்றி மதவெறிக் கட்சிக்கு மரண அடி!- மஞ்சை வசந்தன்

இந்துமதம் என்ற பெயரில் ஆரிய பார்ப்பன சனாதன ஆதிக்கத்தை நிலைநாட்டி, நாட்டில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பாசிசக் கொள்கையை நடைமுறைப்-படுத்தத்  தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தன்னை சமூக சேவைக்கான அமைப்பாகப் புனைவேடம் போட்டு, அரசியல் சார்பற்றதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அதன் முதன்மை இலக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றித் தன் திட்டங்களைச் செயல்படுத்துவதே! அதன் அடிப்படையில் அது தன் பினாமி அமைப்புகளை உருவாக்கி, அவற்றை அரசியலில் ஈடுபடுத்தியது. ஜனசங், பா.ஜ.க. போன்றவை […]

மேலும்....

O.K. என்றால் என்ன?

இன்று உலகம் முழுக்க படித்தவர்கள் முதல் பாமரர் வரை ஒவ்வொருவர் வாயிலும் O.K என்று சொல்வது வழக்கில் உள்ளது. சரி என்ற பொருளில் அது பலராலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த O.K வின் பொருள் என்ன? அது எப்படி வந்தது தெரியுமா? 1840ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு தேர்தலில் மார்ட்டின் வேன் பர்ன் (Martin van buren) போட்டியிட்டுப் பிரச்சாரத்தில் சில வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றுபெற்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தார். அதனால் மக்கள் அவரைச் செல்லமாக […]

மேலும்....

தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24

நான் ஒரு சமத்துவத் தொண்டன் தந்தை பெரியார் நான் சமுதாயச் சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது ஜாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். ஜாதி அமைப்பை ஒழிக்க, “கடவுள், மதம்’’ மற்றும் அவை சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவற்றை ஒழிக்கப் பாடுபடுகின்றவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகம் இல்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும், கோபத்தையும் உண்டாக்கக் […]

மேலும்....

நன்னன் குடும்பத்தினருக்கு பாராட்டு

சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் மா.நன்னன்  அவர்களின் குடும்பத்தின் சார்பில் பெரியார் மணியம்மை மருத்துவ-மனைக்கு ரூ.4 லட்சத்துக்கும் மேல் நன்கொடை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக் கருவிகள் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டதை யொட்டி அக்குடும்பத்தினரைப் பாராட்டி  சிறப்பு செய்யப்பட்டது. பார்வதி நன்னன் அவர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், வேண்மாள் அவர்களைப் பாராட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களும், அவ்வை தமிழ்ச்செல்வன் அவர்களைப் பாராட்டி கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். […]

மேலும்....