பெரியார் கொள்கைகளை நிறைவேற்றுவோம்!

முட்கள் நிறைந்த ஆரியம் என்றும் உன்னைத் தாக்கும்! பெரியார் தந்த கவசம்தான் அதை எதிர்த்து நின்று காக்கும்! அதுவே சூழ்ச்சியின் சதிகளை இனம் கண்டு சாய்க்கும்!   தன்மானச் சிங்கம் நிரந்தர துயில் கொண்ட இந்நாளில்… மூடநம்பிக்கைக்கு மூடுவிழா நடத்தி, ஜாதி என்னும் சமூக நோயை துரத்தி, நம் தந்தை பெரியாரை மறவாமல் போற்றுவோம்! அவரின் கொள்கைகளை நாளும் நிறைவேற்றுவோம்! – அ.உதயபாரதி

மேலும்....

பண்பாட்டின் அடையாளம் விசுவாசத்தின் மறுவடிவம்

பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி இறைவி 4.12.2018 அன்று நிகழ்ந்த விபத்தில் நம் அனைவரையும் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கி சென்ற நம் பொருளாளர் அம்மா டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் நம் தலைவர் தன் இரங்கல் அறிக்கையில் தெரிவித்தது போல நம் அனைவரின் மிகுந்த பாசத்திற்குரியவர். கனிவுடனும் கள்ளமில்லா புன்னகையுடனும் பழகிய அனைவரிடமும் குடும்ப சூழ்நிலை, உடல் நலன் என அக்கறையுடனும் பழகும் பாங்கு அவர்களுக்குரிய சிறப்பியல்புகளாகும். 1978 ஆம் ஆண்டு முதல் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 26

’தீரத் தலைவர்’ சிவராஜ் விடுதலை தந்தபட்டம்! – நேயன் என்.சிவராஜ் நியமனத்தைப் பாராட்டி ‘குடிஅரசு’ எழுதியிருக்கும் குறிப்பு, அவரை பெரியார் எப்படி மதிப்பிடுகிறார் என்பதற்கான சான்றாகும். (‘குடிஅரசு’ 23.5.1937) “இந்திய சட்டசபையில் ராவ்பஹதூர் எம்.சி.ராஜா அவர்களின் இராஜிநாமாவால் காலியான பதவிக்கு ராவ்சாஹிப் என்.சிவராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் சிவராஜ் அவர்கள் பல வருடங்களாக பொது வாழ்வில் அதிக பங்கு எடுத்துக்கொண்டு வருகிறார் என்பது சகலருக்கும் தெரிந்ததே. அவர் தன்னினத்தாருடைய நன்மதிப்பைப் பெற்று வந்திருக்கிறார் […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

வறுமையிலும் வாகை சூடிய பெண்! தமிழகத்தில் ஈரோட்டில் காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் நிவேதா. கரும்பு விவசாயத்தில் கிடைக்கும் சிறு வருவாயைக் கொண்டு வாழ்வு நடத்த வேண்டிய வறுமைக் குடும்பம். என்றாலும், சளைக்காது முயன்று சாதனைகள் பல புரிந்துள்ளார். பெண்ணால் முடியும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடி வருபவர். இதுவரை தேசிய அளவில் 34 தங்கப் பதக்கங்-களை வென்றுள்ளார். இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் நிவேதா கூறுகையில், “11ஆம் வகுப்பு […]

மேலும்....

சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாடு

ஜாதி, தீண்டாமையை ஒழிக்கின்ற நோக்கில் 1957ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கின்ற பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர்   அப்போராட்டத்தில் பங்கேற்றனர். மூவாயிரம் பேருக்குமேல் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் வரை தண்டனை அளிக்கப் பெற்றனர். அப்போராட்டத்தில் உயிர்நீத்த சுயமரியாதைச் சுடரொளிகளை நினைவுகூரும் வகையில் சுயமரியாதைச் சுடரொளி நாள், ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு எழுச்சியுடன் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 26.11.2018 […]

மேலும்....