செயலி

  இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதேசமயம் அது மிகவும் நிறைந்ததும் ஆகும். நாம் செய்யும் தவறுகள் மூலமே அனுபவங்களைப் பெறுகிறோம். மற்றவர்களின் அறிவுரைகளைப் பெற்று நமது தவறுகளைச் சரிப்படுத்திக்கொள்ள இயலுவதில்லை. குழந்தை வளர்ப்பு தொடர்பான முறையான அறிவு நமக்குத் தரப்படுவதில்லை. மூத்தோர் வழிகாட்டல் எல்லாமே அறிவியல் வயப்பட்டது என்றும் சொல்லிவிட இயலாத சூழலில், குழந்தை வளர்ச்சி செயலி (Parenting Skills App) பெற்றோருக்கு வழிகாட்டி, குழந்தை வளர்ப்புக்கு உறுதுணையாக இருக்கிறது. சிறப்பம்சங்கள் 1.            […]

மேலும்....

குறும்படம்

ஒரு கோப்பைத் தேநீர்! ஒரு பெண்ணை இன்னொரு பெண்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை இந்தக் குறும்படம் மனதைத் தொடுகின்ற காட்சிகளால் விவரிக்கின்றது. ஒரு பெண் குற்றவாளியை ஒரு பெண் காவலர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது இருவருக்குள்ளும் நடைபெறுகின்ற உரையாடல் தான் கதைக்களம். குற்றவாளிப் பெண், “ஏட்டம்மா, உன்னை அக்கான்னு கூப்பிடறேனே’’ _ என்று சொல்லும்போது, உறவுகளுக்கு ஏங்குகின்ற பெண்ணுக்கு பின்னுள்ள மொத்த சோகமும் நமக்குள் பரவிவிடுகின்றது. ஏட்டம்மா இறுதிவரையில் அந்தக் குற்றவாளிப் பெண்ணின் கோரிக்கையை ஏற்க […]

மேலும்....

பார்ப்பானுக்கே தீட்டுக் கழிக்கும் பழங்குடி மக்கள்!

ஆரிய பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று கூறி மற்றவர்களுக்குத் தீட்டு உண்டு என்று கூறுவது வழக்கம். ஆனால், தங்கள் வீட்டுக்குள் பார்ப்பான் வந்தால், தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதுகின்றனர் குறிச்சான் என்ற பழங்குடி மக்கள். பார்ப்பான் தங்கள் வீட்டுக்குள் வந்து சென்றால், தீட்டு போக்குவதற்காக, பார்ப்பான் அமர்ந்த இடத்தை பசுவின் சாணத்தால் மெழுகும் வழக்கத்தைக் குறிச்சான் மக்கள் கொண்டுள்ளனர். இவர்கள் நீலகிரி மற்றும் கேரள வயநாடு பகுதிகளில் வாழ்கின்றனர்.

மேலும்....

’டெங்கு’ காய்ச்சல் தடுப்பும், சிகிச்சையும்

‘ஏடிஸ்’ என்கிற கொசு வகையால் பரவும் நோய் இது. இநத் வகைக் கொச, காலை நேரங்களில் மட்டுமே கடிக்கும். கொசுக்களின் பிறப்பிடம்: நீண்டகாலமாக சுத்தப்படுத்தப்படாதத் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் சிரட்டைகள், குடம், வாளி, காலி டப்பாக்கள், டயர்கள், திறந்த நிலையில் இருக்கும நீர்நிலைகள். (இவற்றைச் சுத்தமாக வைத்திருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.) அறிகுறிகள்: உடல் வலி, தலைவலி, எலும்பு வலி, உடல் சேர்வு, தொடர்ச்சியான வாந்தி, தோலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள், கடுமையான […]

மேலும்....

கவிதை

தப்புச் செடிகள் மஞ்சை வசந்தன்   படித்த பெற்றோர் பஞ்சணை மெத்தை பருகிடச் சாரு பள்ளிக்குக் காரு வீட்டுக்கு வந்து விளக்கிச் சொல்லிட பாடத்திற் கொருவராய் பலப்புல வாத்தியார் பகட்டில் படித்தவர் பாரில் எவரோ அறிவில் சிறந்தார்?   சேற்றில் உழைத்து  சோற்றைக் குழைத்த அரைவயிற்றுக் கஞ்சி அடமானக் காசு ஆக்கிய மேதைகளே அண்ணாக்கள்! அப்துல் கலாம்கள்! வைத்து வளர்த்த வனப்புச் செடியினும் தானே வளரும் தப்புச் செடிகளே தாராளமாய் காய்க்கின்றன!  

மேலும்....