“ஆகாஷ்வாணி” மாற்றப்படாவிட்டால் அறப்போர் வெடிக்கும் !

  வட ஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடுகள் 25.04.1982 அன்று வேலூர் கோட்டைவெளி – ஆற்காடு இளங்குப்பன் பந்தல், பூட்டுத்தாக்கு சாமிநாதன் ஆகியோர் நினைவரங்கத்தில் திராவிடர் இளைஞர் இன எழுச்சி மாநாடும், பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு மாநாடும், இன எழுச்சிப் பேரணியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. வட ஆற்காடு வடக்கு மாவட்டச் செயலாளர் ஏ.டி. கோபால் அவர்கள் தலைமையில் சத்துவாச்சாரி தி.க. தலைவர் ஆர்.கணேசன், ரங்காபுரம் எம்.சுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்க இரு மாநாடுகளிலும் சிறப்புரையாற்றினேன். அப்போது […]

மேலும்....

குஜராத் தேர்தலில் பா.ஜ.க. அரசு செய்த மோசடி பாரீர்!

16 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கையைவிட பதிவான வாக்குகள் எண்ணிக்கை அதிகம். ஆதாரம் இதோ: எடுத்துக்காட்டாக பராசா தொகுதியில் வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,25,191 பதிவானது 1,37,262 ஆக 12,071 கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக 80% வாக்குகள்தான் பதிவாகும். ஆனால், இங்கு 110% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, 30% வாக்குகள் மோசடியாகப் போடப்பட்டுள்ளன என்பது வெளிப்படுகிறது. எனவே, இந்த 16 தொகுதிகளிலும் தேர்தலை இரத்து செய்து உடன் மறுதேர்தல் நடத்தி நீதியை நிலைநாட்ட […]

மேலும்....

வாணியர்கள் கோயிலுக்குள் போகலாம்

திருச்செந்தூர் கோயிலுக்குள் வாணியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் நீதிமன்றம் மூலம் தீர்ப்பு பெற்று அனுமதிக்கப்பட்டதை விளக்கும் செய்தி 24.3.1935 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியாகியுள்ளது. 19.3.1935இ-ல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டோன்ஸ் இருவரும் திருச்செந்தூர் ஆலயப் பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்பந்தமான வியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவி கவுன்சில் வரையில் போய் மறுபடியும் அய்க்கோர்ட்டுக்கு வந்தது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் […]

மேலும்....

தமிழை தந்தை பெரியார் இழிவாய்ப் பேசினாரா ?

“மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருந்து வருகிறது. மேலும், இச்சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும், பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும், சிலவித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன’’ என்று பெரியார் குறிப்பிடுகிறார். தமிழ் எழுத்துகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்பிய தந்தை பெரியார் அதற்கான தேவைகளையும், காரணங்களையும் பற்றிக் […]

மேலும்....

நாகத்தை நம்பாதே!

பள்ளி மாணவர்களின் விடுதிக்கு அருகிலேயே சிறிய அளவிலான கோயிலைக் கட்டி முடித்துவிட்டான் செல்வம். விடுதிக்கு அருகில் அய்ந்து செண்ட் அளவிற்கு புறம்போக்கு நிலம் இருந்தது. அதில் ஒரு தனிப் பயிற்சி நிலையம் அமைத்து இலவசமாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என அதே ஊரைச் சேர்ந்த மதியழகன் நினைத்துக் கொண்டிருந்தான். மதியழகன் ஆசிரியர் பயிற்சி முடித்தவன். ஆனால், மதியழகனை முந்திக்கொண்டு அந்த இடத்தில் கோயிலைக் கட்டிவிட்டான் செல்வம். அவனுக்குத்தான் ஊரில் ஆதரவு அதிகம். பஞ்சாயத்துக்காரரான இராஜதுரையும் […]

மேலும்....