கார்ல் மார்க்ஸ்

உலக அளவில் பொதுவுடைமை சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர். ஆதிக்கவாதிகளின் அடித்தளத்தைத் தகர்த்தவர். உழைக்கும் வர்க்கத்திற்காய் உரிமைக்குரல் எழுப்பியவர். சமதர்மவாதிகளின் தோழர். சனாதனவாதிகளுக்குப் பெரும் நெருப்பு!

மேலும்....

நான் ஏன் தமிழைப் போற்றுகிறேன்?

– தந்தை பெரியார்   தோழர்களே! நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன்.  நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக சொற்ப காலமேயாகும்.  திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 3 வருஷமும், ஸ்கூல் பள்ளிக் கூடம் என்னும் ஆங்கில முறைப் பள்ளிக் கூடத்தில் 2,3 வருஷமும்தான் படித்தவன்.  என்னை என் வீட்டார் படிக்க வைக்கக் கருதியதெல்லாம் வீட்டில் என்னுடைய தொல்லை பொறுக்கமாட்டாமல் என்னை பள்ளியில் வைத்துக் கொண்டிருப்பதற்காகவே ஒழிய, நான் படிப்பேன் என்பதற்காக அல்ல என்பதை […]

மேலும்....

வாசகர் மடல்- “பெரியார் சிலை அல்ல – அரிய தத்துவம்’’

‘உண்மை’ இதழ் மிடுக்கோடும், பளிச்சிடும் வண்ணங்களிலும் பகுத்தறிவுக் கருத்துகளைத் தாங்கி வெளிவருவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக, மார்ச் 16-31, 2018 இதழின் அட்டையில் இது பெரியார் மண்! எதிரிகளுக்கு உணர்த்திய இனத்தின் எழுச்சி! எனும் வைர வரிகளும் பெரியார் ஒளிப்படமும் இன எதிரிகளை மிரள வைத்தன. திராவிட இனத்தைப் பாதுகாக்கும் கேடயமாகவும், இன எதிரிகளை வீழ்த்தும் வாளாகவும் விளங்குகின்ற தந்தை பெரியார் “வெறும் சிலை அல்ல – அரிய தத்துவம்’’. தமிழ்நாடு பகுத்தறிவுக் கருத்துக்களால் […]

மேலும்....

குன்றக்குடி அடிகளார்

“இன்று கோயிலுக்கும், ஹோட்டல்களுக்கும் வித்தியாசமின்றி வியாபார ஸ்தலமாக ஆக்கி விட்டார்கள். காப்பிக் கடையில் விற்கப்படும் பலகாரங்களின் விலை ஒவ்வொன்றும் என்ன என்ன என்று வரிசையாய் பலகையில் விலை போட்டு இருப்பது போல, கோயிலிலும் இறைவனை வழிபடுவதற்கும் இன்ன இன்ன ரேட் (விகிதம்) என்று ஆக்கிவைத்து விட்டார்கள்’’ (‘விடுதலை’ – 6.12.1960 பக்கம் 3) இவ்வாறு பேசியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள். கருஞ்சட்டைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கருத்தை காவி உடையில் சொன்னவர்தான் தவத்திரு குன்றக்குடி […]

மேலும்....

ஈழத் தந்தை செல்வா

ஈழத் தந்தை செல்வா   இருள்படிந்த ஈழத்து அரசியல் வானில் இளஞாயிறு எனத் தோன்றியவர் தந்தை செல்வநாயகம். விடுதலை தவறி, பாழ்பட்டுக் கிடந்த ஈழத் தமிழ் மக்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி ஒளி பொருந்திய வாழ்வு நமக்கு உண்டு; தன்னம்பிக்கையுடன் வாழ்; தன்மானத்துடன் வாழ் என்று புது வழிகாட்டி, புத்துணர்வு ஊட்டி வழிநடத்திச் சென்றவர் அவர். வெள்ளையர் வெளியேற அந்த இடத்தில் சிங்களர் ஆதிக்கம் தலை தூக்கியதே இலங்கை வரலாற்றில் நாம் கண்ட கசப்பான உண்மையாகும். இந்தச் சிங்கள வல்லாண்மையை […]

மேலும்....