சினிமா கவர்ச்சி – கானல் நீர் வேட்டையே!

தமிழ்நாட்டு அரசியலில் எதோ பெரிய வெற்றிடம் வந்துள்ளதாகவும், அதனை நிரப்ப ‘ஆபத்பாந்தவர்களாகவும்’ ஊழலை ஒழிக்க “உத்தம அவதாரங்களாகவும்’’ திடீரென்று, _ ஏற்கனவே பல ஆண்டுகளாக தேக்கி வைத்துள்ள ஆசைகள் என்ற கற்பனைக் குதிரைகள் மீது சவாரி செய்ய இரண்டு சினிமா நடிகர்கள் புதிய அரசியல் கட்சிகளைத் துவக்கி ‘தமிழ்நாட்டைக் காப்பாற்றும் ‘திருப்பணியில்’ தங்களை _ புகழ் வேண்டாது, பெருமை வேண்டாது ‘மக்கள் நலன்’ ஒன்றையே பிரதானமாக்கி இப்பெரும் பணிக்கு  வருவதாக _ வந்துள்ளதாகக் கூறுகின்றனர். மீடியாக்கள் _ […]

மேலும்....

அம்மா பற்றி

அம்மா பற்றி அய்யா… ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது. செப்டம்பர் பிறந்தால் 94ஆம் ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன். நான் சென்னைக்கு வந்தால் ‘உண்மை’ மாத இதழையும், சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன். சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் […]

மேலும்....

முற்றம்

குறும்படம் (COMMA) உயர்கல்வி நிலையங்களில் ஜாதி பேதம்  மாணவர்களை எவ்வளவு கொடூரமாக பாதித்திருக்கிறது என்பதை ஒரே ஒரு காட்சி மூலமே எல்லாக் கொடுமைகளையும் உணர்த்தி விடுகிறது இந்த 9:55 நிமிடம் ஓடும் குறும்படம். ஜாதியைச் சுட்டிக்காட்டி ஒருவரை தொடர்ந்து இழிவுபடுத்தியதால் மிகுந்த தன்னிரக்கத்திற்கும், துன்பத்திற்கும் ஆளான அந்த மாணவன் தற்கொலைக்குத் துணிந்து அதற்கு முன் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் அவன் எழுப்பும் ஜாதி தொடர்பான கேள்விகள் பார்க்கின்ற நம்மையும் பதற வைக்கிறது. இறுதியில் தூக்குக் கயிற்றை […]

மேலும்....

நீருக்கு நிறம்!

நீருக்கு நிறம் கிடையாது. ஆனால், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ‘லேக் ஹில்லியர்’’ (Lake Hillier) ஏரியானது இயற்கையாகவே ரோஸ் நிறத்தில் இருக்கிறது. இது, எல்லாக் காலநிலை களிலும், இதே நிறத்தில்தான் இருக்கிறது. இதிலுள்ள தண்ணீரை வெளியேற்றினாலும் ‘பிங்க்‘ நிறம் மாறுவதில்லை. ‘துனாலியல்லா சலினா’ (Dunaliella Salina) எனப்படும் உப்பு நீரூற்றுப் பாசிகள் இந்த ஏரியில் உண்டு. இந்த நுண்ணுயிர்களே சூரியன் ஓளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றன. அதனால், ரோஸ் மில்க் போன்று தண்ணீர் காட்சி அளிக்கிறது. இந்த ‘ரோஸ் மில்க்‘ […]

மேலும்....

கவிஞர் சல்மாவுடன் ஒரு நேர்காணல்

நேர்காணல்: உடுமலை வடிவேலு “வீட்டைத் தாண்டி வெளியே செல்லக் கூடாது’’ என்று வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் கால்கள், உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாக தடம் பதித்த அனுபவம் இது. 50 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிற கவிஞர் சல்மா, 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு எழுத வந்த பெண்களில் இவர் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கியத்தோடு மட்டுமல்லாது பஞ்சாயத்துத் தலைவி, சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர், வாரியத் தலைவர், மற்றும் தன்னார்வத் தொண்டு  நிறுவனர், மற்றும் அரசியல் எனப் […]

மேலும்....