கிராமப்புற இளைஞர்கள் கல்வி குறித்த ஆய்வு முடிவுகள்

இந்தியாவின் கிராமப்புற இளைஞர்களைப் பற்றி ‘பிரதம்’ என்னும் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்டது. ‘2017ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கை’ (கிஷிணிஸி) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ‘36 சதவீதக் கிராமப்புற இளைஞர்களுக்கு இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பது தெரியவில்லை என்பது தெரியவந்தது. 14 சதவீதக் கிராமப்புற இளைஞர்களால் இந்தியாவின் வரைபடத்தை அடையாளம் காண முடியவில்லை. 25 சதவீத இளைஞர்களால் தங்களுடைய தாய்மொழியில் அடிப்படையான வாக்கியங்களைச் சரளமாக வாசிக்க […]

மேலும்....

தமிழை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார்

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (7) நேயன்     தமிழிலும், தமிழ்ப் புலவர்களிடமும் உள்ள குறைகளைச் சுட்டி, மேம்படுத்த கடுமையாகப் பேசிய பெரியார் தமிழை உயர்த்திப் பேசத் தவறவில்லை. 1.    “தமிழ்மொழி செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியை விடவும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்லக்கூடியது’’ என்று வின்ஸ்ஸோ கூறுகிறார். 2.    கால்டுவெல், “தமிழ்மொழி பண்டையது, நலஞ்சிறந்தது, உயர்நிலையில் உள்ளது, இதைப் போன்ற திராவிட மொழி வேறெதுவும் இல்லை’’ என்று சிறப்பித்துக் கூறுகிறார். 3.    சிலேட்டர் என்பவர், […]

மேலும்....

பேரீச்சை பிரச்சினை!

பேரீச்சம் பழம் என்றதுமே அதில் அதிக அளவில் சத்துகள் இருப்பதும், ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது என்பதும்தான் எல்லோருக்குமே நினைவுக்கு வரும். ஆனால், பேரீச்சை உண்பதால் சில பிரச்சினைகள் வரவும் வாய்ப்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? குளுகோஸை விடவும் அடர்த்தியான சர்க்கரை பேரீச்சம் பழத்தில் நிறைந்துள்ளது. எனவே, டைப்-2 வகை நீரிழிவு நோயாளிகள் இதனைச் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் தின்றதும் வாய் கொப்பளிக்காமல் இருந்தால், பற்கள் சொத்தையாகி விடுவதற்கான வாய்ப்பு உண்டு. […]

மேலும்....

பல்லி !

ஆறு.கலைச்செல்வன்     புதிய கடையின் தொடக்க விழாவை அமர்க்களமாக நடத்தி முடித்தான் வேல்முருகன். ஏற்கனவே சிறிய அளவில் நடத்திக் கொண்டிருந்த பர்னிச்சர் கடையை விரிவுபடுத்தி நகரின் மய்யப் பகுதியில் வாடகைக்கு இடம் பிடித்துத் தொடங்கினான். இதற்காக அதிக வட்டிக்கு பெரிய தொகையை கடனாகக் கந்தசாமி என்பவனிடம் வாங்கினான். கந்துவட்டி கந்தசாமி என்றே அவனுக்குப் பெயர். வட்டியை மட்டும் ஒழுங்காக அவனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இரத்தக் களரிதான். அப்படிப்பட்டவனிடம் துணிந்து கடன் வாங்கினான் வேல்முருகன். காரணம், […]

மேலும்....

பசுமாடு பற்றி பா.ஜ.க. கல்வி அமைச்சரின் பிதற்றல்!

பா.ஜ.க. ஆளும் இராஜஸ்தான் மாநில அரசின் கல்வியமைச்சர் வாசுதேவ் தேவ்நானி அவர்கள் பசுக்கள் பிராணவாயுவையே உள்ளிழுத்து பிராணவாயுவையே வெளிவிடுகின்றன என்று உண்மைக்குப் புறம்பான, அறிவுக்குப் பொருந்தாத, விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத கருத்தை வெளியிட்டுள்ளார். சுவாசித்தல் என்பதே பிராணவாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியிடுவதுதானே! அதுதானே விலங்குகளின் இயக்கம். இதுகூடப் புரியாது அல்லது புரிந்தும் புரியாதது போல் நடித்து தங்கள் கோமாதாவுக்கு எந்த உயிருக்கும் இல்லா சிறப்பியல்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக உளறிக் கொட்டுகின்ற இவர்களெல்லாம் கல்விஅமைச்சர்கள் என்றால் அம்மாநிலக் […]

மேலும்....