வியர்வை!

    உழைப்பின் அளவுகோல் உளச்சலின் வடிகால்!   இறுக்கத்தின் கசிவு நெருக்கத்தின் பிழிவு!   வாழ்நாள் கூட்டலுக்கு வகை செய்யும் கழித்தல்!   வருவாய் மிஞ்ச வழிசெய்யும் செலவு!   எந்திர யுகத்தில் இறந்த கணக்கு!   சிந்தினால் சிறப்பளிக்கும் விந்தை விளைவு!   சமத்துவச் சம்மட்டி ஜாதிதான் கவுரவமென்று முப்புரிகள் மூளையில் விதைத்ததை முனைந்து பிடுங்கிய சீலர்!   மதக் குட்டையில் மூழ்கி மதியிழந்த மக்களை மனித நேய கடல் பக்கம் திருப்பிய கலங்கரை […]

மேலும்....

வாசகர் கடிதம்

  மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். கோவில்பட்டியில் இருந்து ஜெயா எழுதுகிறேன். முதன்முதலில் நான் எழுதிய கடிதத்தை ‘உண்மை’, ‘விடுதலை’யில் நீங்கள் வெளியிட்டிருந்தீர்கள். நன்றி! உங்களுடைய கருத்துகள் எனக்கு பெரிய தூண்டுகோலாய் இருந்தன. இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அடிக்கடி எனக்குத் தோன்றும். பெரிய பெரிய வெற்றியாளர்கள்கூட தன் மனதை ஜெயிக்க முடியாமல் தோல்வி அடைகிறார்கள்.  பெண் என்பவள் காதல் என்கிற வலையில் மாட்டிக்கொண்டு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் […]

மேலும்....

எல்லாம் எவன் செயல்?

பாவலர் ப.கல்யாணசுந்தரம்   சாமி கோவிச்சுக்கிட்டு ஊருக்கும் நாட்டுக்கும் மழைமாரி பெய்யாமல் தடுத்தாண்டு இருக்கு. இந்த விஷயம் எங்களப்போல் பெரியவங்களுக்குத் தெரியுது; எளசுகளுக்கு எப்படித் தெரியும்? நாமதான் ஒரு முடிவு பண்ணணும்!’’ என்று சிவன்கோயில் குருக்களைப் பார்த்தார். சோலையூர் ஆற்றில் மணல் லாரிகள் சாரை சாரையாக வந்து மணல் எடுத்துச் செல்லும். சாலையில் _ வீடுகளில் ஒரே புழுதிமயமாய்ப்  போனது. ஊருக்கு அருகிலேயே மணலைக் கொட்டி _ பெரிய மலைபோல் ஆக்கினார்கள். அங்கிருந்து வெளியூர்களுக்கு டோக்கன் போட்டு […]

மேலும்....

கடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்! அனைத்து உரிமைகளையும் மீட்போம்!!!

  குடந்தை மாநாட்டில்  திராவிட மாணவர்கள் சூளுரை! மஞ்சை வசந்தன்   காவிகள் பறித்த கல்வி உரிமைகள்! கல்வியென்பது மக்களின் உயிர்மூச்சான உரிமை! உயர்வு தாழ்வு, எழுச்சி, மீட்சி, விழிப்பு, விவேகம், பதவி, பணிகள், சமூகத்தில் தனக்கான இடம், தலைமுறையின் எதிர்காலம், அறிவு, ஆற்றல், திறன், நுட்பம், ஆய்வு, படைப்பாற்றல் என்று பலவும் கல்வி சார்ந்தே வருகின்றன; பெறப்படுகின்றன. ஆரிய பார்ப்பனர்கள் இதை நன்கு அறிந்தே கல்வியைத் தனக்கு மட்டுமே உரியதாக்கிக்-கொண்டு, மற்றவர்களுக்கு பல நூற்றாண்டு-களாக ஆட்சியாளர்களின் […]

மேலும்....

இது ஒரு நல்ல அறிகுறி

தந்தை பெரியார்     நாம் படித்தால் ஜாதித் தொழில்  செய்ய மாட்டோம். நம் பெண்கள் எட்டாவது படித்து விட்டால் புல் விற்கப் போவாரா? நம்ம பையன் பத்தாவது படித்துவிட்டால் சிரைக்க, வெளுக்க, கக்கூசு (மலக்கழிவு) எடுக்கப் போவானா? இப்போது நாம் படிக்க ஆரம்பித்ததனாலே எதிர்காலத்தில் பார்ப்பான் மண்வெட்டி தூக்கணும்; பாப்பாத்திகள் களை வெட்ட வேண்டும் என்றுதான் ஆகும். இதனால்தான் பார்ப்பான் எதிர்க்கிறான் இவையெல்லாம் நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. பரம்பரை இராசாக்களை ஒழித்தவர்கள் பார்ப்பான் உரிமையில் […]

மேலும்....