செயலி

TAMIL NADU TREEPEDIA APP: இச்செயலியில் நாட்டு மரங்கள்_150 (Native Trees) பற்றிய தகவல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அகராதியில் பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. வீட்டில் சிறிய தோட்டம் வைக்க நினைப்(ழிணீtவீஸ்மீ ஜிக்ஷீமீமீs) பற்றிய தகவல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அகராதியில் பார்த்து தெரிந்துகொபவர்களும் விவசாயிகளும் எந்த இடத்தில் எவ்வகையான மண்ணில் எந்தெந்த மரங்கள், செடிகளை எவ்வளவு இடைவெளியில் வைத்து எவ்வளவு உரமிடலாம் என்ற அனைத்து வழிமுறைகளையும் இச்செயலி மூலம் அறியலாம். கட்டில், நாற்காலி, கதவு போன்றவைகளுக்காக வளர்க்கப்படும்  […]

மேலும்....

குறும்படம்

தளிர் குழந்தை இல்லாத இளம் தம்பதியர், ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகின்றனர்.  வழக்கமான பிரச்சனைகள் இன்றி, எந்தக் குழந்தையைத் தத்தெடுப்பது என்பதில் பிரச்சனை தொடங்குகிறது. “பெண் குழந்தை என்றாலே செலவுதான். பெண்கள் படித்துப் பட்டம் பெறுவது கல்யாணம் செய்து கொள்ளத்தானே’’ _ என்று பிற்போக்குத்தனமாக கூறிவிடுகிறான் கணவன். மனைவி அதிர்ந்து போகிறாள். ஏனென்றால் அவளும் படித்துப் பட்டம் பெற்றாலும் Home Maker- ஆகத்தான் இருக்கிறாள். விவாதத்தின் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரிதான் என்று இருவரும் தூங்கிவிடுகின்றனர். […]

மேலும்....

மனிதப் பற்றாளர் தந்தை பெரியார்!

ஜாதி ஒழிப்புப் புரட்சி செய்த தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பனர் –  தாழ்த்தப்பட்டோர் –  உயர்ஜாதிக்காரர்கள் என்ற பிறவி பேதத்தை ஒழிக்க எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாண்டார் என்பதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு ‘குடிஅரசு’ இதழில் பதிவாகியுள்ள ஒரு நிகழ்வு இது. திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கிராமம் மங்கலம். 30.7.1947 அன்று காலை 9 மணிக்கு மங்கலம் கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்டோர் சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வரவேற்பு: கே.எஸ்.ராமச்சந்திரன் தலைமை: தோழர் அருணாசல அய்யர் மணியம்மையார், என்.வி.நடராஜன் ஆகியோர் உரைக்குப் […]

மேலும்....

நடிகவேள் எம்.ஆர்.இராதா

“நமது 40வருட பிரச்சாரத்தை ஒரே நாடகத்தில் செய்கிறார்” என்று தந்தை பெரியார் பாராட்டினார். தாமாகவே சொந்தத்தில் நாடகக் குழுவொன்றை நிறுவி அதற்குத் திராவிட மறுமலர்ச்சி நாடகசபா என்று பெயர் வைத்து ‘தூக்குமேடை’, ‘போர்வாள்’, ‘இரத்தக் கண்ணீர்’ எனும் புரட்சி நாடகங்களைப் பல ஊர்களில் நடத்தி, நாடு முழுவதும் மாபெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டார்! இவருக்கென்றே நாடகத் தடைச் சட்டம் என்று ஒன்றை அரசு நிறைவேற்றியது. இராதாவைப் பெருமை தேடிவந்து சேர்ந்தது. ஆனால், அந்தப் பெருமை காரணமாக அவர் தம்மை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

இனப்பகை வெல்ல ஒரணியில் திரள்வோம்! கே:       ”இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்று தொல்.திருமாவளவன் கூறி இருக்கின்ற நிலையில், “இடஒதுக்கீட்டால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது’’ என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவது பற்றி தங்கள் கருத்து என்ன?                 – எம்.ராஜன், தேனி ப:           முன்னவர் கொள்கைத் தெளிவு உள்ள லட்சியவாதி; பின்னவர் கொள்கைத் தெளிவற்ற குழப்பவாதி. பா.ஜ.க.வுக்கு, “விலைபோனவர் போல உள்ளது அவரது கருத்து.’’ அம்பேத்கரைவிட அதிகம் தெரிந்தவர் போல இடஒதுக்கீடு பற்றிய கருத்து […]

மேலும்....