சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார்

தந்தை பெரியார் அவர்கள் தாம் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு தாம் துணைத் தலைவராக இருந்துகொண்டு, வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் சமூகத்தின் பால் கொண்ட பற்று வியக்கத்தக்கதாக போற்றத்தக்கதாக இருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார். தென்மாவட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தின் தூணாக விளங்கியவர். 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் மதுரை மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்த இவர் நீதிக் கட்சியுடன் தொடர்பில் இருந்தார். 1929ஆம் ஆண்டு பிப்ரவரி […]

மேலும்....

அண்ணாவின் இராமாயண எதிர்ப்புப் போர்

திராவிடர்  இயக்கத்தின் மிக முக்கியமான பிரச்சாரங்களில் ஒன்று இராமாயண எதிப்பு. இராமாயணக் கதையினை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. சைவ, சமண, பவுத்த மதத்தினரும் காலங்காலமாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் ஒரு பகுதியே சைவர்கள் இட்டுக்கட்டிய கதையான இராமேசுவரத்தில் வந்து இராமன் லிங்க பூஜை நடத்தினார் என்பது. இக்கதையை சைவர்கள் இட்டுக்கட்டிப் பரப்பினாலும், வைணவ பக்தர்கள் இதை நம்புவதில்லை. குறிப்பாக இன்னும் கூட வைணவ மடாதிபதிகள் இராமேசுவரம் சென்று லிங்கத்தினை வழிபடுவதில்லை, மடிந்தும் புறந்தொழா மாண்புடைய வைணவர்கள் இப்படி […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (27)

                                        எலி இளவரசியாய்ப் பிறக்குமா? “திரேதா யுகத்தில் வைகுந்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் ஒரு விஷ்ணு பக்தன். ஒருநாள் அவன் விஷ்ணு ஆலயத்தில் விளக்கு ஏற்றி விட்டு வீட்டுக்குச் சென்றான். நெய் ஊற்றி விளக்கை ஏற்றியதால், அதன் மணம் ஓர் எலியை ஈர்த்தது. அது விளக்குத்திரியைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த அசைவினால் விளக்கு நன்கு பிரகாசிக்கத் தொடங்கியது. அதனால் பெருமான் விக்கிரகமும் ஒளிர்ந்தது. அந்த எலி ஒரு பாம்பினால் இறந்தது. அதனை யமதூதர்கள் கயிறு கட்டி […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

மெட்ரோ ரயில் நிலையங்களை நிர்வகிக்கும்  மகளிர் அணி! பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் பலகீனமானவர்கள் என்கிற பொய்மைக் கருத்து ஆணாதிக்க சமூகத்தில் இன்றளவும் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. இது முற்றிலும் அறியாமை என்று நிரூபிக்கும் வகையில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வரை என இரண்டு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ […]

மேலும்....

ஆரிய மாயை ஒழித்திடும் தந்தை பெரியாரும் அண்ணாவும்

‘அண்ணா’ என்ற பெயர் அண்ணாதுரை என்ற பெயரின் சுருக்கம் என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால், இயற்கையாய் அமைந்த அந்த அண்ணா என்ற பெயர்ச் சுருக்கத்தின் உட்பொருள், ஆழம், அகலம், பொருத்தம், பொருள், பிணைப்பு போன்றவை ஏராளம்; ஏராளம். திராவிட இயக்கம் ஒரு குடும்பம். இது மிகையாகச் சொல்லப்படும் வார்த்தை அலங்காரம் அல்ல. உண்மை! ஒருவரும் மறுக்கமுடியாத உண்மை! பெரியார் திராவிட இயக்கத்தின் தந்தை! அண்ணா உட்பட அவரது தொண்டர்கள் அனைவரும் உடன்பிறப்பு. அதில் மூத்த பிள்ளை அண்ணா […]

மேலும்....