தமிழ் 13,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது! ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங் சொசைட்டி ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது!

ஜெர்மனி, நெதர்லாந்து, லண்டன், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகளின் மொழியியல் அறிஞர்கள் ஓராண்டுக் காலம் ஆய்வு செய்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். சமஸ்கிருதம் தொன்மொழி, செம்மொழி என்பதெல்லாம் மோசடியானவை. சமஸ்கிருதம் எழுத்தற்ற பேச்சு மொழி. அதை எழுதாக்கிளவி என்றே அழைப்பர். தமிழிலிருந்துதான் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் பின்னாளில் தரப்பட்டது. தமிழ்ச் சொற்களை மாற்றித்தான் சமஸ்கிருத சொற்களை உருவாக்கினர். சலம் என்ற தமிழ்ச் சொல்லை ஜலம் என்றும், சுரம் என்ற தமிழ்ச் சொல்லை ஜுரம் என்றும், […]

மேலும்....

இளவேனில் என்ற தமிழ்ப் பெண்ணின் இமாலய சாதனை!

– பண்பாளன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் பதினெட்டு வயதான தமிழச்சி இளவேனில். இளவேனிலின் சொந்த ஊர் கடலூர். சிறு வயதிலிருந்தே விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவர். தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் என தடகளப் போட்டிகளில் சாதிக்க வேண்டுமென்பது அவரது லட்சியமாக இருந்தது. பள்ளி அளவிலான போட்டிகள் உட்பட சிறுசிறு போட்டிகளில் கலந்துகொண்டு தடகளத்தில் பதக்கங்களைக் குவித்து வந்த […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1927இல் விதவைப் பெண்களின் மறுமணத்தை காந்தியார் ஆதரித்துப் பேசினார் என்பதற்காக ஆத்திரம் அடைந்த பார்ப்பனர்கள், அவர் சென்ற அடுத்த நாளே கும்பகோணத்தில் பொதுக்கூட்டம் போட்டுக் கண்டித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரின் பதினைந்தெழுத்து மந்திரம்

– வழக்கறிஞர் சு.குமாரதேவன்  பல்வேறு சமயங்களைக் கடைப்பிடிக்கும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயரினைக் குறிக்கும் வகையில் மிகச் சுருக்கமாக சில மந்திரச் சொற்களை வைத்திருப்பார்கள். கிறிஸ்தவர்கள், ஏசுவே ஜீவன் என்றும்; இஸ்லாமியர்கள், பிஸ்மில்லா ஹிர் ரகுமான் இன் ரஹிம் என்றும்; சைவர்கள், அய்ந்தெழுத்து மந்திரம் என்று சொல்லி சிவாய நம என்றும்; ஓம் நமோ நாராயணா என்ற எட்டெழுத்து மந்திர சொல்லாக வைணவர்களும்; சமணர்கள், வந்தே ஜினவரம் என்றும் சொல்வார்கள். ஆனால் தந்தை பெரியார், […]

மேலும்....