அழிக்கப்படும் காட்டை அமைப்பால் காத்த சாதனைப் பெண்

பண்பாளன் ஒடிசாவில் உள்ள ராய்ங்பூர் எனும் ஊரில் பிறந்து வளர்ந்தவர் ஜமுனா. அவருடைய தந்தை விவசாயி. அவர் வசித்த பகுதி பச்சைப் பசேலென்று காடுகள் சூழ்ந்திருந்தன. அவரின் திருமண வாழ்வு வரை அந்த பசுமை நிறைந்த காட்டில்தான் மகிழ்ச்சியாய் திரிந்து விளையாடி மகிழ்ந்தார். 1998இல் ஜமுனாவுக்கு 18 வயதானபோது அவருக்கு மான்சிங் டுடு என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணமான அன்றே கணவரின் ஊரான மதுர்காமுக்கு கனவுகளுடன் கணவரோடு இடம் பெயர்ந்தார். புகுந்த வீட்டில் நுழைந்து வீட்டுக்குப் பின்பக்கம் […]

மேலும்....

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சி

இனியன் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 17.3.2018 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சி தொடக்கத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் அறிமுக உரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாவுக்கு தலைமையேற்று மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் படத்தைத் திறந்துவைத்து சிறப்பு செய்தார். ‘சட்டக்கதிர்’ ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத், மாநில […]

மேலும்....

உயிர்க்குமிழ்

ப.ஜீவகாருண்யன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு, மக்களை ஆட்சி செய்யும் பாண்டிய நாட்டின் கொற்கை துறைமுகத்தில், முத்துக் குளிப்பது என்பது காலங்காலமாக பங்குனி, சித்திரை ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஏறக்குறைய (காலை ஒன்பது மணியளவிலிருந்து மாலை நான்கு மணி வரை) நடத்துகின்ற சிரமம் கூடிய தொழில். மூச்சையடக்கி முத்துக் குளிப்பது என்பது ஒவ்வொரு மனிதனும் தனது ஈடு இணை யில்லாத இன்னுயிரைப் பணயம் வைத்து ‘துணிந்த வனுக்குத் துக்கமில்லை’ என்றிறங்கும் துயரம் கூடிய செயல். இப்படிப்பட்ட துயரம் […]

மேலும்....

சக்கர நாற்காலியில் சாதனைகள் படைத்த தன்னம்பிக்கைச் சரித்திரம்

ஸ்டீஃபன் ஹாக்கிங் மஞ்சை வசந்தன் சக்கர நாற்காலியிலே வாழ்க்கை. கழுத்துக்கு மேலே தலை சாய்ந்து கிடக்கும்! கண்களிலும், உதடுகளிலும் அவ்வப்போது அசைவு தெரியும்! கைகால்கள் செயலிழந்துவிட்டன. உணவை ஊட்டிவிட வேண்டும். அதிலே முக்கால் பங்கு கீழே விழும். வாய்க்குள் சென்ற சிறு அளவு உணவையும் மென்று விழுங்க அவர் பெருமுயற்சி எடுப்பார். உணவு ஊட்டுபவர் அவரின் மாணவர்தான். இந்த நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கணிதப் பேராசிரியராகப் பணி. இப்படிப்பட்டவர் சாதாரண மனிதரல்ல. உலகின் உச்சநிலை விஞ்ஞானி! நியூட்டன், […]

மேலும்....

டாக்டர் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்ரல் – 14(ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாள்) தந்தை பெரியார் “தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலே இருப்பது தவறு; இந்து மதந்தான் அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கியது’ என்பதாகச் சொல்லி, ‘அனைவரும் முஸ்லிம் ஆகவேண்டும்; நானும் முஸ்லிம் ஆகப்போகிறேன்’ என்று அவர் சொன்னார். எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதைக் கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே, உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள். அப்போது தோழர் அம்பேத்கர் […]

மேலும்....