நூல் அறிமுகம்

  நூல்: பெரியார் என்னும் இயக்கம் ஆசிரியர்: தா.பாண்டியன் வெளியீடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,                  41-பி, சிட்கோ இன்டஸ்டிரியல்   எஸ்டேட், அம்பத்தூர்,   சென்னை – 600 098. பக்கம்:              92  விலை: ரூ.80/-   “தந்தை பெரியார் ஒரு தலைவரோ, சிந்தனையாளரோ, பேச்சாளரோ, எழுத்தாளரோ, தொண்டரோ மட்டும் அல்லர். அவர் இவை அனைத்தையும் ஏனைய ஆளுமையையும் உள்ளடக்கிய ஓர் இயக்கம்; பெரியார் என்ற மாமனிதர் மறைந்துவிட்டார். ஆனால், அவரின் கொள்கைகள், கோட்பாடுகள் […]

மேலும்....

“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்!

இனியன்   கல்வி காவிமயமாகி வருவதையும் அதனால் ஏற்படவிருக்கின்ற ஆபத்தையும் விளக்கி “மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை _ ஒரு பார்வை’’ என்னும் தலைப்பில் பிரபல கல்வியாளர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் 12.07.2018 மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்தரங்கத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையேற்க, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்புரை யாற்றினார். பொதுப் பள்ளிகளுக்கான மாநில […]

மேலும்....

பெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12

  தமது மாணவர் பருவத்தில் திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து தமது இறுதி காலம் வரை திராவிடர் கழகத்தில் பணியாற்றியவர் பேராசிரியர் அ.இறையன். அரசுப் பணியிலிருந்து ஓய்வடைந்த இவர், மறுநாள் காலையே இயக்கத் தலைமையகத்திற்கு வந்து இயக்கத் தொண்டுக்கு முழுமையாக தன்னை ஒப்படைத்துவிட்டார். தலைமையின் நோக்கப்படி தலைவரின் கட்டளையேற்று பல்வேறு பணிகளை செய்தவர். ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்களில் இனநலம், தமிழாளன், நாடகன், பொருநன், பெரியார் மாணாக்கன், மாந்தன், பாணன், வேட்கோவன், சான்றோன், அறிவேந்தி, கிழவன், வழக்காடி, பிடாரன், […]

மேலும்....

சுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,

வை.கலையரசன் புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊரில் வசதி படைத்த மிராசுதார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா திருவைகாவூர் பிச்சை பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘புலவர்’ பட்டம் படிக்க வந்தபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆயினர். ஆசிரியர் மூலம் தந்தை பெரியாரின் அறிமுகம் கிடைத்தது. இவருக்கு திருமணம் செய்துவைக்க இவரது […]

மேலும்....

இயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம்! பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்!

  திருச்சி நகரில், தென்னூர் காண்ட்ராக்டர் சீனிவாசன் என்ற பெரியார் பெருந்தொண்டர் இருந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்புதான் இயற்கை எய்தினார். தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் தங்கி இருக்கும் போதெல்லாம் தினசரி அவர்களைச் சந்தித்து அளவளாவக் கூடிய தொண்டர்களில் அவரும் ஒருவர். அவர் மட்டுமல்ல. அவரது உறவினர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ அத்துணை பேரும் இயக்க ஈடுபாடு மிக்கவர்கள் ஆவார்கள். வாடிப்பட்டி சுப்பையா, காலஞ்சென்ற வாடிப்பட்டி கங்கண்ணன் போன்ற கழக முக்கியஸ்தர்கள் எல்லாம்கூட அவரது நெருங்கிய உறவினர்கள் […]

மேலும்....